15 வயதில் சீரியல் ஹீரோயினாக மாறிய ஷிவானி, மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தார். ஷிவானி நாராயணன், ஒரு சில சர்ச்சை வலையங்களுக்குள் சிக்கிய பின்னரே, விஜய் டிவி சீரியல் சீரியலில் இருந்து விலகி... ரெட்டை ரோஜாவாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மலர்ந்தார்.
இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது, பிக்பாஸ் வாய்ப்பு ஷிவானி வீட்டு வாசல் கதவை தட்ட... வெள்ளித்திரை வழிகாட்டியாக அமைந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, ரசிகர்களை கவர்ச்சியில் கட்டி போட்டாரே தவிர, தனி திறமை என எதையும் வெளிப்படுத்தவில்லை.
சேலை அழகில் சாச்சிபுட்டாளே... கீர்த்தி சுரேஷின் கார்ஜியஸ் போட்டோஸ்!
முதல் வாரத்தில், அதிக போட்டியாளரால் நாமினேட் செய்யப்பட்ட ஷிவானி, அனைத்து போட்டியாளர்களின் பல்ஸை அறிந்து... சைலண்டாக 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்து சாதித்து காட்டினார். பிக்பாஸ் வீட்டில் ஷிவானிக்கும் - பாலாவுக்கு இடையே லைட்டாக காதல் புகைய துவங்கிய நிலையில், பிரீஸ் டாஸ்கில் உள்ளே சென்ற ஷிவானியின் அம்மா... விட்ட டோஸில் ஒரே அடியாய் மொத்தத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு போட்டியில் கவனம் செலுத்தினார்.
ஒரு வழியாக ஆரம்பமே அசத்தலான வாய்ப்பு அமைந்தது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது பொண்டாட்டியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த ஷிவானி தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.