விஷாலின் விடாமுயற்சியால் 12 வருட காத்திருப்புக்கு பின் ரிலீசாகும் மத கஜ ராஜா!

Published : Jan 03, 2025, 10:10 AM ISTUpdated : Jan 03, 2025, 10:14 AM IST

Madha Gaja Raja Release : சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மத கஜ ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
14
விஷாலின் விடாமுயற்சியால் 12 வருட காத்திருப்புக்கு பின் ரிலீசாகும் மத கஜ ராஜா!
Madha Gaja Raja

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்த படம் மத கஜ ராஜா. இப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தார். மேலும் நடிகை சதா ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். ரிச்சர்டு எம் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

24
Madha Gaja Raja Release Date

மத கஜ ராஜா திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. அந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இடையிடையே இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அது வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், 12 ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் ஒரு வழியாக மத கஜ ராஜா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளனர்.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி விலகியதும் விறுவிறுவென பொங்கல் ரேஸில் குதித்த 10 படங்கள் - முழு லிஸ்ட் இதோ

34
Madha Gaja Raja Pongal Release

அதன்படி வருகிற ஜனவரி 12ந் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி மத கஜ ராஜா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படத்தில் காமெடியனாக நடித்துள்ள சந்தானம் தான் இதுகுறித்த அறிவிப்பை தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு ஏற்கனவே 10 படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த ரேஸில் 11வது படமாக விஷாலின் மத கஜ ராஜா இணைந்துள்ளது.

44
Pongal Release Movies

மத கஜ ராஜா உடன் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் நடித்த நேசிப்பாயா, விஜயகாந்த் மகன் ஷண்முகப்பாண்டியன் நடித்த படைத் தலைவன், சிபிராஜின் டென் ஹவர்ஸ், கிஷான் தாஸ் நடித்த தருணம், ஷான் நிகம் நடிப்பில் உருவாகி உள்ள மெட்ராஸ்காரன், சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், மிர்ச்சி சிவா நடித்த சுமோ ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... அப்பா படத்துடன் போட்டி; பொங்கல் ரேஸில் அதிதி ஷங்கர் கொடுத்த செம ட்விஸ்ட்!

click me!

Recommended Stories