Bigg Boss Tamil season 8 contestants
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. வழக்கமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை இம்முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 24 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் இரண்டே வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது.
Bigg Boss 8
இந்நிகழ்ச்சியில் தற்போது பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், செளந்தர்யா, ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு தான் பிக் பாஸ் டைட்டில் கிடைக்க உள்ளது. இதில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றதால், இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார் ரயான். அவருக்கு டஃப் கொடுத்த முத்துக்குமரன் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை நழுவவிட்டார்.
இதையும் படியுங்கள்... ஒரே டாஸ்கில் தலைகீழாக மாறிய ரிசல்ட்; பிக் பாஸ் முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா?
Bigg Boss Contestants
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர். ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் தீபக், ஜாக்குலின், ரயான், ராணவ், பவித்ரா, அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
Pavithra
இவர்களில் தற்போதை நிலவரப்படி தீபக் தான் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டிடிஎப் டாஸ்க் வென்ற ரயான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அடுத்ததாக ராணவ், விஷால், ஜாக்குலின் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர்கள் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை.