Bigg Boss Tamil season 8 contestants
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 88 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய உள்ளது. இதில் தற்போது ரயான், ராணவ், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், தீபக், பவித்ரா, மஞ்சரி, செளந்தர்யா, ஜாக்குலின் ஆகிய 10 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் கிடைக்கப்போகிறது. பைனல் நெருங்க நெருங்க போட்டியும் கடுமையாகி வருகிறது.
Jacquline, Rayan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வார வாரம் பல்வேறு டாஸ்க்குகள் வைக்கப்படும். அதில் மிக முக்கியமான டாஸ்க்கு தான் டிக்கெட் டூ பினாலே. இந்த வாரம் முழுக்க நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் மொத்தம் 10 போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் யார் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்களோ அந்த போட்டியாளர் நேரடியாக பைனலுக்குள் செல்லும் வாய்ப்பை பெறுவார். மொத்தம் 5 நாட்கள் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்... TTF டாஸ்கில் பவித்ராவை திட்டமிட்டு தோற்கடித்தாரா பிக் பாஸ்? வீடியோவால் வெடித்த சர்ச்சை
Bigg Boss Ticket To Finale
இதில் நேற்று வரை இந்த டாஸ்கில் ரயான், விஜே விஷால், முத்துக்குமரன் ஆகிய முவருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அதில் விஷால், பவித்ரா, ஜாக்குலின் மற்றும் அருண் பிரசாத் ஆகிய நால்வரின் பாயிண்டுகள் மொத்தமாக பறிபோயின. இதனால் இவர்கள் நால்வரும் 0 புள்ளிகளுக்கு சென்றனர். அவர்களின் புள்ளிகள் அனைத்தும் மற்ற போட்டியாளர்கள் பகிர்ந்து எடுத்துக் கொண்டனர்.
TTF Task
பின்னர் மஞ்சரிக்கு வந்த போன் டாஸ்கில் அவர் தலையை கலரிங் செய்ய ரயானை தேர்வு செய்ததால் அந்த டாஸ்கில் வென்றதன் மூலம் ரயானுக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. அந்த இரண்டு புள்ளிகள் கேம் சேஞ்சராக மாறி இருக்கிறது. இதனால் டிக்கெட் டூ பினாலே டாஸ்குகளின் முடிவில் ரயான் 21 புள்ளிகளுடன் வெற்றிபெற்று இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் முத்துக்குமரன் உள்ளார். அவருக்கு 19 புள்ளிகள் கிடைத்திருந்தன.
Ticket To Finale Task Winner Rayan
ஒருவேளை ரயானுக்கு பதிலாக மஞ்சரி ஹேர் கலரிங் செய்துகொள்ளும் டாஸ்கை முத்துக்குமரனுக்கோ அல்லது மற்ற போட்டியாளருக்கோ வழங்கி இருந்தால் ரிசல்ட் மாறி இருக்கும். இதன்மூலம் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்திருக்கிறார் ரயான். ஒருவேளை இந்த வாரம் நடைபெறும் எவிக்ஷனில் ரயான் எலிமினேட் ஆனால் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள முத்துக்குமரனுக்கு டிக்கெட் டூ பினாலே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இதெல்லாம் இங்க வேண்டாம்; ஜாக்குலினிடம் சுயரூபத்தை காட்டிய சவுந்தர்யா!