நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஹிண்ட் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய கேடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அப்படத்துக்கு பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற இலியானாவுக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. இதனால் குறுகிய காலகட்டத்திலேயே பிரபாஸ், மகேஷ் பாபு போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார் இலியானா. இதையடுத்து ஷங்கர் இயக்கிய நண்பன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
24
Ileana Pregnant
நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, அப்படத்தின் வெற்றிக்கு பின் பாலிவுட்டில் பிசியானார். பின்னர் தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டாத இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் இலியானா. அதை அவரே பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் ஆள் அட்ரஸே தெரியாமல் தொலைந்துபோன இலியானா, கடந்த 2023-ம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். திருமணமே ஆகாமல் எப்படி கர்ப்பம் ஆனார் என்பது தான் பலரது கேள்வியாக இருந்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலியானாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பின்னரே தன்னுடைய காதல் கணவரை அறிமுகப்படுத்தினார் இலியானா. அதன்படி மைக்கெல் டோலன் என்பவர் தான் தன் கணவர் என்பதை கடந்தாண்டு அறிவித்தார்.
44
Ileana Expecting second child
இந்த நிலையில், புத்தாண்டன்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் 2024-ம் ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளின் போது எடுத்த புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார் இலியானா. அதில் அக்டோபர் மாதம் தான் கர்ப்பமானதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அதில் தன் கையில் பிரக்னன்ஸி கிட் உடன் போட்டோ போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.