கேம் சேஞ்சர் விஜய் நடிக்க வேண்டிய படமா? ஷங்கர் போட்ட கண்டிஷனால் தலைதெறிக்க ஓடிய தளபதி!

First Published | Jan 3, 2025, 8:35 AM IST

ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடிகர் விஜய்யை தான் முதலில் நடிக்க வைக்க இருந்தாராம் இயக்குனர் ஷங்கர்.

Vijay is the First Choice For Game Changer

இந்தியன் 2 படத்தின் படுதோல்விக்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தில் ராஜு தயாரித்து உள்ளார்.

Game Changer Movie Team

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடையது. கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து தினசரி கலந்துரையாடுவார்களாம். அப்போது கார்த்திக் சுப்புராஜ் தன்னிடம் உள்ள அரசியல் கதை பற்றி சொல்லி, இதை தன்னுடைய உதவி இயக்குனர்களிடம் சொன்னபோது ஷங்கர் பட கதை மாதிரி பிரம்மாண்டமாக இருக்கு என சொன்னார்கள் என கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ட்ரைலருகே இப்படியா? 'கேம் சேஞ்சர்' நாயகன் ராம் சரணுக்கு 256 அடி கட்டவுட் வைத்து மிரட்டும் ரசிகர்கள்!

Tap to resize

Shankar, Ramcharan

பின்னர் கதையை கேட்டு இம்பிரஸ் ஆன ஷங்கர், அதற்கு திரைக்கதை அமைத்து கேம் சேஞ்சர் படமாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஜனவரி 10ந் தேதி பொங்கல் விடுமுறையை ஒட்டி கேம் சேஞ்சர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் முதலில் நடிகர் விஜய் நடிக்க இருந்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Game Changer Movie First Choice

கேம் சேஞ்சர் படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் முதலில் சொன்னது விஜய்யிடம் தானாம். அவருக்கும் கதை கேட்டு மிகவும் பிடித்துப் போனதால் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் அதன் பின்னர் இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷனால் தான் கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஜகா வாங்கிவிட்டாராம் தளபதி. அது வேறெதுவுமில்லை, இப்படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் கால்ஷீட் தர வேண்டும் என கேட்டிருக்கிறார் ஷங்கர்.

Shankar, Vijay

அரசியல் பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவ்வளவு நாள் கால்ஷீட் தர முடியாது என சொல்லி விலகிவிட்டாராம் தளபதி. அதன்பின்னரே தில் ராஜு விஜய்யை வைத்து வாரிசு படத்தை தயாரித்திருக்கிறார். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். நடிகர் விஜய் இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் பட பாடல்களின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த ஷங்கர்

Latest Videos

click me!