நடிகர் விஷால் நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். இதுதவிர எஸ்.ஜே.சூர்யா, புஷ்பா வில்லன் சுனில், இயக்குனர் செல்வராகவன் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. விஷால் நடித்த எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.
அதன்படி நடிகர் விஷால், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் ஆகியோர் நடிகர் விஜய்யை சந்தித்து அப்படத்தின் டீசரை போட்டுக்காட்டி உள்ளனர். அந்த டீசரை பார்த்த நடிகர் விஜய், படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தற்போது மார்க் ஆண்டனி படக்குழுவினர் விஜய்யை அவரது புதிய அலுவலகத்தில் சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.