நடிகர் கார்த்தி - இயக்குனர் முத்தையா கூட்டணியில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான கொம்பன் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. அந்த வெற்றிக்கூட்டணி 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைந்துள்ள படம் தான் விருமன். கார்த்தி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.
ஏ செண்டர் ஆடியன்சுக்கு இப்படம் கனெக்ட் ஆகாவிட்டாலும் பி மற்றும் சி செண்டர்களில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பேமிலி ஆடியன்சுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள அதிதியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர் மன்றமெல்லாம் தொடங்கும் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டார்.