இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'அண்ணாத்த' பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், குடும்பமாக பார்க்கக்கூடிய ஒரு சிறந்த படம் என ஒருதரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், சூப்பர் ஸ்டாரின் மாஸ் காட்சியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றமாகவே அமைந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கிய நிலையில், தற்போது ரஜினி கலந்து கொள்ளாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
மேலும் இந்த படம் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை தமன்னா யாரும் எதிர்பார்க்காத கெட்டப்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல் இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சிவகார்த்திகேயனும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது தமன்னாவும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.
அதேபோல் சிலர் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்த வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், தமன்னா இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பாரா? அல்லது பிளாஷ் பேக் காட்சியில் ஹீரோயினாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.