Vimal Sing Kokkarako Song Line in Ghilli Movie : விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விமல் பாடியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அது என்ன அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Vimal Sing Kokkarako Song Line in Ghilli Movie : தளபதி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் கில்லி படமும் ஒன்று. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வெளியான இந்தப் படம். ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூல் குவித்தது.
25
கில்லி ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
வில்லனான பிரகாஷ் ராஜிடமிருந்து ஹீரோயினான த்ரிஷாவை காப்பாற்றுவதையும் கபடி போட்டியில் ஜெயிப்பதையும் மையப்படுத்தி இந்தப் படம் வெளியாகியிருந்தது. மதுரைக்கு சென்று பிரகாஷ் ராஜை அடித்து அவரிடமிருந்து த்ரிஷாவை காப்பாற்றி தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருப்பார். இது படத்தில் விஜய்யின் தங்கையாக் நடித்திருக்கும் ஜெனிஃபருக்கும் தெரியும்.
35
கில்லி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற அர்ஜுனரு வில்லு, ஷா லா லா, அப்படி போடு, சூர தேங்கா, கொக்கர கொக்கரக்கோ என்று பல பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்தப் பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடலாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் வித்யாசாகர் இசை தான். ஏ எம் ரத்னம் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
45
கில்லி ரீ ரிலீஸ் - கொக்கர கொக்கரக்கோ பாடல்
இந்தப் படம் ஏற்கனவே 50 கோடி வசூல் குவித்திருந்த நிலையில் மீண்டும் 2ஆவது முறையாக ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. அப்படி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் ரூ.26 கோடி முதல் ரூ.33 கோடி வரையில் வசூல் குவித்திருந்தது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் விமல் ஒரு பாடல் பாடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஒரு பாடலில் இடம் பெற்ற சில வரிகளை தான் பாடியிருப்பதாக விமல் பேசியிருப்பதாக சினிமாபுரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
55
தூம் ஷக் தூம் தூம் தூம் ஷக்
அந்த வரிகள் என்னவென்றால் கொக்கர கொக்கரக்கோ என்ற பாடலில் இடம் பெற்ற தூம் ஷக் தூம் தூம் தூம் ஷக் தான் அந்த பாடல் வரிகள். இதனை விமல் பாடியிருப்பதோடு படத்தில் விஜய் உடன் இணைந்து அவரது குழுவில் ஒருவராக நடிக்கவும் செய்திருப்பார். இந்தப் பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் உதித் நாராயணன் மற்றும் சுஜாதா மோகன் இருவரும் இணைந்து அந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.