
Heart Beat Season 2 Full Episodes Free Watch : சினிமாவில் புதிய படங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் நேரடியாக ஓடிடிக்கு பார்சல் கட்டப்படுகின்றன. இதுவே ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றன. அதோடு, ஓடிடிக்கு என்று சில படங்களும் எடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும் வெப் சீரிஸ்களில் ஒன்றுதான் ஹார்ட் பீட் 2 (Heart Beat Season 2). ரசிகர்களின் ஃபேவரைட்டும் கூட. இதில் வரும் ரதி, ரீனா, அர்ஜூன், ரவி, நவீன், அமையா, ராக்கி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை மிகப் பெரிய அளவில் ஈர்த்திருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் இந்த தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீசன் 1 வெற்றிக்கரமாக முடிவடைந்து ஹார்ட் பீட் சீசன் 2 டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. கதைப்படி ரதி தான் ரீனாவின் நிஜ அம்மா என ஆர் கே ஆஸ்பிட்டல் முழுவதும் தெரியும்.
ரீனா தனது மகள் என்பதும் கூட ரதிக்கு மட்டுமின்றி அவர் தான் தனது பேத்தி என்பது கூட ரதியின் அப்பா தியாகராஜனுக்கும் தெரியும். ஆனால், அப்பா யார்? ஏன் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்றார்கள்? என்ன நடந்தது என்பது தான் இப்போது ரீனாவின் கேள்வி மட்டுமின்றி ரசிகர்களின் கேள்வியாகவும், அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆர்கே ஆஸ்பிட்டல் சி இ ஓவாக ரதி ஆகவேண்டிய சூழலில் தனது அப்பாவின் மறைவிற்கு பிறகு சி இ ஓவாக மருத்துவனையின் முழு பொறுப்பையும் அர்ஜூன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஹார்ட் பீட் சீசன் 2
ஆஸ்பிட்டலை விட்டு போன ரதி இப்போது மீண்டும் மருத்துவனைக்கு வந்துள்ளார். மேலும் ரீனா மற்றும் அர்ஜூனின் ரொமான்ஸ் காட்சிக்கு நடுவில் இப்போது கிரணும் (ஷிவம்) குறுக்கே வந்துள்ளார். அவருக்கும் ரீனா மீது ஒரு க்ரஷ். இதற்கிடையில் கிரண் மீது நிலோஃபர் (அக்ஷதாவிற்கும்) க்ரஷ். இதில் உண்மையில் யார் யாருடன் சேர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்தாலும் நவீன் மற்றும் அனிதா இருவரும் லிவிங் உறவில் இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நவீனின் அம்மா உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆக கடைசி ஆசையாக பரத நாட்டியம் ஆட வேண்டும் என்று கேட்க, அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மருத்துவமனை சார்பில் அனைவரும் செய்தனர். இதில் ரதி, நிலோஃபர், ரீனா, அருணா, அமையா என்று எல்லோரும் பரதநாட்டியும் ஆடினர். அப்போது குணாவின் அம்மா மயக்கமடைந்த நிலையில் அவருக்கு என்ன நடந்தது ஏது நடந்தது என்பது குறித்து வரும் வியாழக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படும் எபிசோடில் தெரிய வரும்.
இப்படி பல காதல், சண்டை, ரொமான்ஸ், பொறாமை, எதிர்ப்பு, செண்டிமெண்ட் என்று எல்லா காட்சிகளுடனும் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த வெப் சீரிஸ் நேரடியாக ஒரு படமாக எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றதோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் குவித்திருக்கும். ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு இயக்குநரும் பழம்பெரும் நடிகருமான ஆர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் வெப் சீரிஸாக வெளியிட்டு வருகிறார்.
ஹார்ட் பீட் சீரிஸின் முதல் சீரிஸ் 100 எபிசோடுகள் வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே போன்று இந்த சீரிஸூம் 100 எபிசோடுகள் வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ஹார்ட் பீட் 3 சீரிஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரையில் ஹார்ட் பீட் 2 சீரிசானது, 32 எபிசோடுகள் வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஹார்ட் பீட் என்ற வெப் சீரிஸை பார்க்கதவர்கள் உடனே மறக்காமல் பார்க்கலாம். முழு நேர ஒரு எண்டர்டெயின்மெண்ட் வெப் சீரிஸாக இந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த வெப் சீரிஸில் எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கிறது.