Zee Writers Room in Tamil : ஜீ தமிழ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக திரைக்கதை எழுத்தாளர்களை கண்டறியவும், அவர்களை வளர்க்கவும் Zee Writers’ Room’ மூலம் புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறது.
ஜீ தமிழின் புதிய முயற்சி – 100 பேருக்கு அடிக்கும் ஜாக்பாட்
Zee Writers Room in Tamil : நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இளம் எழுத்தாளர்களும், படைப்பாளர்களும், இயக்குநர்கள், சிந்தனையாளர்கள் என்று பலரும் உருவாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் சினிமா, இலக்கியம் என்று டிஜிட்டல் உலகில் பல சாதனையாளர்களும் உருவாகிறார்கள். இந்த நிலையில் தான் ஜீ தமிழ் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளது. அதன்படி புதிய எழுத்தாளர்களை கண்டறியவும், அவர்களது திறமையை மேலும் வளர்க்கவும் ஜீ தமிழ் Zee Writers’ Room’ மூலம் புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறது.
24
திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்குதல்
இந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள இளம் மற்றும் வளர்ந்து வரும் திரைக்கதை எழுத்தாளர்களை கண்டறியவும், அவர்களை வளர்க்கவும் ‘Zee Writers’ Room’ என்ற புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக சினிமா மற்றும் டிஜிட்டல் உலகில் கதைகளை உருவாக்க புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
34
ஜீ தமிழ் திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சி
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்கம் மற்றும் மராத்தி மொழிகளில் திறமைகளை தேடி, 80 நகரங்கள் மற்றும் 32 மையங்களில் ஜீ நிறுவனம் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. திரைக்கதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிறுவனம் சினிமா துறையில் பணியாற்ற துடிக்கும் எத்தனையோ திரைக்கதை எழுத்தாளர்களுக்கு புதிய கதைகளை உருவாக்கும் சமுதயாத்தை கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு கதவை திறந்து வைக்கிறது.
44
திரைக்கதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு
இந்த Zee Writers’ Room மூலமாக தேர்வு செய்யப்படும் 100 பேருக்கு ஜீ வழிகாட்டுதலில் கதைகளைக் கற்பதும், எழுதுவதும், திரைக்கதைகளாக மாற்றுவதும் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். இந்த போட்டியில் முதலில் எழுத்து தேர்வு நடைபெறும். நேர்காணல் முறையும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர்கள் www.zeewritersroom.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.