தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமும், வசூல் மன்னனுமான அஜித் நடிப்பில் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ள படம் 'குட் பேட் அக்லீ'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள், களைகட்டி வருகிறது. படம் குறித்தும், இந்த படத்தில் நடித்துள்ள நச்சத்திரங்கள் பற்றியும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
அப்பா - மகன் செண்டிமெண்ட் டச்
'குட் பேட் அக்லீ' வெறும் ஆக்ஷனை மட்டுமே முன்னிருந்து படமாக இருக்காது, குடும்பங்கள் கொண்டாடும் செண்டிமெண்ட் டச் இருக்க கூடிய படமாக இருக்கும் என ஆதிக் கூறிய தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதாவது, தந்தை - மகன் இடையே உள்ள அன்பை தான் பிரதானமாக காட்டி உள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித்தின் மகனாக வலிமை பட வில்லன்
இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு மகனாக நடித்த அந்த நடிகர் யார் என்கிற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, 'குட் பேட் அக்லீ' படத்தில் ஏற்கனவே அஜித்துடன் 'வலிமை' படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா தான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் கதாபாத்திரம் குறித்த தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பதாகவும் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமையும் என கூறப்படுகிறது.
24 மணி நேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்த குட் பேட் அக்லீ – துணிவு, மாஸ்டர் டீசர் முறியடிப்பு!
'குட் பேட் அக்லீ'' படத்தில் நடித்த நடிகர்கள்
அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில், அர்ஜுன் தாஸ், பிரசன்ன உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் கதை குறித்த பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருந்தாலும், படம் வெளியாகும்போது மட்டுமே இந்த படத்தின் கதை என்ன என்கிற உண்மை தெரியவரும். ஆனால் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் கொண்ட படமாக இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என ஆதிக் தெரிவித்துள்ளார்.