ரேகா வேண்டாம் என எச்சரித்தார்கள்; ராகேஷ் ரோஷன் கூறிய ஷாக் தகவல்!

ரேகாவை 'கூன் பாரி மாங்' படத்தில் நடிக்க வைப்பதற்கு அணுகுவதற்கு முன்பு மக்கள் தன்னை எச்சரித்ததாக இயக்குனர் ராகேஷ் ரோஷன் கூறியுள்ள தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Rekha is not good choice Peoples Warning Rakesh Roshan mma

ரேகா பாலிவுட் திரையுலகின் எவர்க்ரீன் நடிகை ஆவார். அவர் பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல் தன்னுடைய நேர்த்தியான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்.
 

'கூன் பாரி மாங்' திரைப்படம்:

அந்த வகையில் ரேகா நடிப்பில், வெளியான 'கூன் பாரி மாங்' திரைப்படம் ரேகாவுக்கு மிகப்பெறிய வெற்றி படமாக அமைந்தது. 1988 இல் வெளியான இந்த படத்தை, ராகேஷ் ரோஷன் இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது படம் ஆகும். ராகேஷ் ரோஷனைப் பொறுத்தவரை, அவர் ரேகாவை படத்தில் நடிக்க வைக்க நினைத்த போது, ​​பலர் தன்னை எச்சரித்ததாக கூறியுள்ளார்.
 


ரேகா பற்றி ராகேஷ் ரோஷனுக்கு வந்த எச்சரிக்கை:

இதுகுறித்து நியூஸ் ஏஜென்சி, ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், ராகேஷ் ரோஷன் 'கூன் பாரி மாங்' தொடர்பான தகவலை  பகிர்ந்து கொண்டார்.  மேலும் ரேகா குறித்து மக்கள் எச்சரிக்கை விடுத்த பிறகு அவர் என்ன செய்தார் என்பது பற்றியும் கூறியுள்ளார்.  ரேகாவை பற்றி தொடர்ந்து பேசிய இவர்,  "மிகச் சில கதாநாயகிகளிடம் மட்டுமே, இருக்கும் ஒரு குணம் ரேகாவிடம் இருக்கிறது. அவர் தனது எல்லா படங்களிலும் வித்தியாசமாக தெரிவார். நான் அவருடன் ஒரு நடிகராக கூட இரண்டு படங்கள் நடித்துள்ளேன். 'கூன் பாரி மாங்' படத்தில் ஒரு இயக்குனராக அவரை அம்மா வேடத்தில் நடிக்க வைக்க நான் அணுகியபோது, சிலர் அவர் இந்த படத்திற்கு சரியான தேர்வாக அமையமாட்டார் என்றே கூறினார்கள்.

பாலிவுட் நடிகை ரேகாவின் லிவ்-இன் ரிலேசன்? யார் அந்த நபர்?
 

ஷூட்டிங் வருவதில் தாமதம்:

காரணம் அவர் ஒருபோதும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வரமாட்டார்.  எப்போதும் ஷூட்டிங் முடிவதற்கு முன்பே ஓடிவிடுகிறாள் என்று சொன்னார்கள்."  ஆனால் நான் அவரை பற்றிய இந்த வதந்திகளை இதக்ற்கு முன் கேள்வி பட்டிருந்தாலும் நம்பியது இல்லை. நான் ரேகாவுடன் பணிபுரிந்த போது, ஒருபோதும் இப்படி அவர் நடந்துகொண்டதில்லை. 
 

நேரடியாகவே நிபந்தனையை கூறிய ராகேஷ் ரோஷன்

மேலும் ரேகாவிடம் கூன் பாரி மாங்' கதையை சொல்லும் போது...  'இது என்னுடைய இரண்டாவது படம், இது ஒரு கடினமான கதைக்களம். ஒரு பெண் சார்ந்த படம். இந்தப் படத்தில் நான் ஒரு ரிஸ்க் எடுக்கிறேன். கதை என்னவென்றால், கிளைமாக்ஸில், மனைவி தன் கணவனைக் கொல்கிறாள். என கதையை விளக்கிய பின்னர், நேரடியாகவே இந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்க கூடாது என கூறியதற்கு, நான் எனக்கு பேசிய தொகையை கொடுக்க மறுப்பவர்களை மட்டுமே தொந்தரவு செய்வேன் என கூறினார்.
 

மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கூன் பாரி மாங்':

பின்னர் 'கூன் பாரி மாங்' படம் வெற்றிகரமாக உருவானது.  இதில் ரேகாவுடன் கபீர் பேடி, சோனு வாலியா, காதர் கான், சத்ருகன் சின்ஹா, ராகேஷ் ரோஷன் மற்றும் சயீத் ஜாஃப்ரி போன்ற நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தகதகவென மின்னிய நீதா அம்பானி! ரேகா ஸ்டைலில் அசர வைத்த ஹைதராபாத் குர்தா, காடா துப்பட்டா!

Latest Videos

vuukle one pixel image
click me!