தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ளது. அதன்படி முதல் சீசனின் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகென் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஆகியோர் டைட்டில் வின்னர்களாகினர்.