போயஸ் கார்டனில் நடந்த சமரச பேச்சுவார்த்தை... ரஜினி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயத்தால் மனம் மாறிய தனுஷ்..!

Published : Oct 06, 2022, 10:10 AM ISTUpdated : Oct 06, 2022, 10:16 AM IST

Rajinikanth : சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

PREV
15
போயஸ் கார்டனில் நடந்த சமரச பேச்சுவார்த்தை... ரஜினி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயத்தால் மனம் மாறிய தனுஷ்..!

நடிகர் தனுஷும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா-வும் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். தனுஷை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா, 3 மற்றும் வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களிலும் நடிகர் தனுஷ் நடித்திருந்தார்.

25

இவ்வாறு சினிமாவிலும் சாதித்து வந்த இந்த ஜோடி கடந்த ஜனவரி மாதம், தாங்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த காதல் ஜோடியின் பிரிவால் நடிகர் ரஜினிகாந்தும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். மீண்டும் சேர்ந்துவிடுமாறு ரசிகர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

35

அதேபோல் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் இருந்து வந்தனர். சமீபத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களது மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது.

இதையும் படியுங்கள்... பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன்.. பிரம்மாண்ட தொகையை சம்பளமாக தட்டித்தூக்கிய மணிரத்னம்- எவ்ளோ தெரியுமா?

45

அப்போது இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

55

அப்போது நடிகர் ரஜினிகாந்த், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என அறிவுறுத்தியதாகவும், அவரின் பேச்சைக் கேட்டு மனம்மாறிய தனுஷ், ஐஸ்வர்யா உடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சமரச பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதனால் இருவீட்டாரும் சந்தோஷம் அடைந்துள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்...  ஹரிஷ் கல்யாணின் காதலி என்ன செய்கிறார்?... இருவருக்கும் திருமணம் எப்போது? - லீக்கான தகவல் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories