அந்த வகையில், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, கசடதபற, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓமணப்பெண்ணே என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் நேற்று, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையை பிடித்தவாரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் ஏதேனும் படத்தின் புரமோஷனுக்காக இவ்வாறு பதிவிட்டு உள்ளதாக கமெண்ட் செய்து வந்தனர். ஏனெனில் இதற்கு முன்னர் அவர் நடித்த ஓ மணப்பெண்ணே படம் ரிலீசாகும் முன் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ஹார்டின் எமோஜியை போட்டிருந்தார். அந்த சமயத்தில் இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அது படத்துக்கான புரமோஷன் என பின்னர் அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... விரைவில் திருமணம்... காதலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஹரீஷ் கல்யாண்! வைரலாகும் புகைப்படம்!