தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் ரிலீசானால், அப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருப்பது வழக்கம். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தற்போது வரை இப்படம் ஆறு நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் இதற்கு முன் 300 கோடிக்கு மேல் வசூலித்த படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எந்திரன் 2.0
முதன்முதலில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்த நேரடி தமிழ் படம் என்றால் அது ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான எந்திரன் 2.0 திரைப்படம் தான். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் மொத்தமாக ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகில்
அட்லீ - விஜய் கூட்டணி என்றாலே தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணி என சொல்லும் அளவுக்கு இதுவரை அவர்களது காம்போவில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் சக்கைப்போடு போட்டன. குறிப்பாக இவர் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய பிகில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இப்படம் மொத்தம் ரூ.302 கோடி வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... வயிற்றில் குழந்தையுடன் அழகு தேவதையாய் ஆலியாபட்..வளைகாப்பு போட்டோஸ் இதோ
விக்ரம்
கமல்ஹாசன் தயாரித்து, நடித்த விக்ரம் திரைப்படமும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த ஜூன் மாதம் ரிலீசாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் மொத்தம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.