யூனியன் பிரதேசமான புதுவையில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகர் ஆனந்தராஜ். இவருடைய அப்பா சிவில் சர்ஜன். இவருடைய அம்மா மஹாலட்சுமி, தெலுங்கு சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்தவர். 50-பது மற்றும் 60-வது காலகட்டங்களில், பல பாடல்களை பாடி பிரபலமானவர். ஆனந்தராஜ் பள்ளி படிப்பை முடித்த பிறகும், போலிஸ் ஆபீஸராக வேண்டும் என்று அவருடைய அப்பா ஆசைப்பட்டாலும், ஆனந்தராஜிற்கு அதில் துளியும் விருப்பம் இல்லை.
சினிமா மீதான ஆர்வம் காரணமாக எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து சினிமா பற்றி படித்தார். அப்போது அவருடன் படித்தவர் தான் கன்னட நடிகர் சிவராஜ்குமார். படித்து முடித்த பிறகு, தனக்கு வாய்ப்புகள் குவியும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், பல இடங்களில் நடிக்க முயற்சி செய்த பின்னர் ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆனந்தராஜுக்கு கிடைத்தது.
25
ஆனந்தராஜ் நடித்த திரைப்படங்கள்:
இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் சிவக்குமார், பிரபு, ரகுமான், அம்பிகா, செந்தில் ஆகியோர் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. சினிமாவில் அறிமுகமான போதே ஒரே ஆண்டில் தாய்மேல் ஆணை, ஜீவா, என் தங்கச்சி படிச்சவ, செந்தூர பூவே, பாட்டி சொல்லை தட்டாதே, காளிசரன் என்று 7 படங்களில் நடித்தார். அதுவும் இளம் வில்லன் என்றால் பல இயக்குனர்கள் இவரை தான் தேர்வு செய்தனர். சில திரைப்படங்களில் ஆனந்தராஜ் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
ஒரு காலத்தில் முன்னணி வில்லனாக கொடிகட்டி பரந்த ஆனந்தராஜ் இப்போதெல்லாம் குணச்சித்திர ரோல்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் தான் நடித்து வருகிறார். பாட்ஷா, ஏழுமலை, சூர்யவம்சம் ஆகிய படங்கள் அவருக்கு டர்னிங் பாய்ண்டாக அமைந்தது. ஏழுமலை படத்தில் அவர் பேசும் டயலாக் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறது.
ஒரு சில படங்களில் பெண் கெட்டப்பும் போட்டு நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் வா வாத்தியார், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகிய படங்களில் உருவாகி உள்ளது. சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாகவே இவர் வாழ்ந்து வருவது பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.
45
நிஜ வாழ்க்கையில் ஹீரோ:
சினிமாவில் இவர் வில்லனாக நடிப்பதால், இவர் பல ரசிகர்களிடம் திட்டு வாங்கியுள்ளார். ஒரு சில ரசிகர்கள் இவரை நேரில் கூட திட்டிய சம்பவங்கள் நடந்துள்ளது. அதே போல் படத்திற்காக புகைபிடிப்பது, மது, மாது என்று எல்லா கெட்ட பழக்கங்களுக்கு இருப்பது போல் மிகவும் நேர்த்தியாக நடிப்பார்.
ஆனால், நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இவருக்கு கிடையாதாம். இது குறித்து ஆனந்தராஜ் சமீபத்தில் கூறும் போது... "ஏராளமான படங்களில் மோசமான ரோல்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் சிகரெட், சரக்கு என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி எந்த கெட்ட பழக்கமும் எனக்கு இல்லாததால் தான் நான் இன்று வரை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆனந்தராஜ் பலருக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக வாழும் பிரபலங்கள்:
இதற்கு முன்னதாக நம்பியாரும் சினிவில் எல்லா விதமான ரோல்களிலும் நடித்திருப்பார். வில்லனாக அவர் நடிக்காத மோசமான காட்சிகளே இல்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் நம்பியாருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. தீவிர ஐயப்ப பக்தரும் கூட... இப்படி சினிமாவில் வில்லனாக நடித்து நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வாழ்ந்த நடிகர்கள், தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.