வெயிட்டான பட்ஜெட் உடன் தயாராகும் மூக்குத்தி அம்மன் 2 - ஆத்தாடி இத்தனை கோடியா?

Published : Feb 06, 2025, 02:45 PM IST

சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ளதாம்.

PREV
14
வெயிட்டான பட்ஜெட் உடன் தயாராகும் மூக்குத்தி அம்மன் 2 - ஆத்தாடி இத்தனை கோடியா?
மூக்குத்தி அம்மன் 2

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக திகழ்ந்து வருவது இயக்குனர் சுந்தர் சி தான். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து சுமார் 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த மதகஜராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது.

24
அம்மனாக நயன்தாரா

பழைய படமாக இருந்தாலும் அதில் இடம்பெற்ற நடிகர் சந்தானத்தின் காமெடி வேறவெலவில் ஹிட்டானதோடு, படமும் வசூல் வேட்டையாடியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன புதுப்படங்கள் இப்படத்தின் வசூலில் பாதிகூட வசூலிக்கவில்லை. அந்த அளவுக்கு லாபகரமான படமாக மதகஜராஜா அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு படங்கள் உருவாக உள்ளது.

இதையும் படியுங்கள்...  மனோபாலா அன்று சொன்ன வார்த்தை; இப்ப வரைக்கும் மறக்க முடியல! சுந்தர் சி உருக்கம்!

34
விலகிய ஆர்.ஜே.பாலாஜி

அதில் ஒன்று கலகலப்பு மூன்றாம் பாகம். இதில் விமல், மிர்ச்சி சிவா ஆகியோர் ஹீரோவாக நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுதவிர சுந்தர் சி-யில் லைன் அப்பில் மற்றுமொரு பிரம்மாண்ட படம் உள்ளது. அதுதான் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம். இப்படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், அதன் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர் சி இயக்க இருக்கிறார். இதிலும் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

44
மூக்குத்தி அம்மன் 2 பட்ஜெட்

மூக்குத்தி அம்மன் 2 படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்க உள்ளார்களாம். நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் இங்கதான் இருக்கு; வைரலாகும் சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டி போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories