கணவர் அஜித்தின் 'விடாமுயற்சி'; FDFS ஷோ பார்த்த ஷாலினி! வைரலாகும் புகைப்படம்!

Published : Feb 06, 2025, 03:08 PM IST

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அவருடைய மனைவி ஷாலினி, சத்யம் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  

PREV
16
கணவர் அஜித்தின் 'விடாமுயற்சி'; FDFS ஷோ பார்த்த ஷாலினி! வைரலாகும் புகைப்படம்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி:

அஜித் நடிப்பில் கடைசியாக, 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். அதிரடி ஆக்சன் திரில்லர் மூவியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித் தன்னுடைய 62-வது திரைப்படத்தை... நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் தயார் செய்த கதை அஜித்துக்கு மட்டுமின்றி லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தால், இந்த படத்தில் இருந்து அதிரடியாக விக்னேஷ் சிவனை விளக்கி விட்டதாகவும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

26
இரண்டு வருடங்களுக்கு பின் வெளியாகியுள்ள அஜித்தின் விடாமுயற்சி

இயக்குனர் மகிழ் திருமேனி, இதற்கு முன்பு முன்தினம் பார்த்தேனே, தடையறை தாக்க, மீகாமன், தடம், கழகத் தலைவன், போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். குறிப்பாக இவருடைய தடம் திரைப்படம் நடிகர் அருண் விஜய்க்கு, திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்த இவர், இயக்க உள்ள இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில்... இப்படத்தின் டைட்டில் 2003 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும் அக்டோபர் மாதம் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அஜர்பைஜான் நாட்டில் துவங்கியது.

விஜயகாந்த் விஷயத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு; இயக்குனர் விக்ரமன் வருத்தம்!

 

36
காலமாற்றம் காரணமாக படப்பிடிப்பு தாமனம் ஆனது:

பின்னர் கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. 'விடாமுயற்சி' படத்தை எடுத்து முடிப்பதற்கு முன் பல பிரச்சனைகள் ஏற்பட்டதே இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாக முடிவடைய காரணம் எனக் கூறப்பட்டது. அஜர்பைஜான் நாட்டில் வெயிலில் நடப்பது போல் கதைக்களம் மற்றும் சூழ்நிலை அமைத்திருக்கும். ஆனால் அந்த நாட்டில் ஏற்பட்ட கால மாற்றம் காரணமாக, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தடைபட்டது.
 

46
தடைபட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு:

பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டுக்கு சென்ற அஜித் தன்னுடைய மனைவிக்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், அங்கிருந்து இரண்டே நாட்களில் இந்தியா திரும்பினார்.
 இதன் பின்னர் தாய்லாந்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் த்ரிஷா அஜித்தின் காதல் காட்சிகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில், அதனை டிசம்பர் மாதம் முடித்தனர்.

https://tamil.asianetnews.com/gallery/cinema/vikraman-mistake-in-vijayakanth-vaanathai-pola-movie-in-tamil-mma-sr96sg

 

56
ரசிகர்களுடன் FDFS காட்சியை பார்த்த ஷாலினி அஜித்:

பின்னர் ஒரு சில காரணங்களால் பொங்கல் ரிலீஸ் ஆக அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம், ரிலீஸ் ஆகாமல் போன நிலையில்... பல பிரச்சனைகளை கடந்து திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் அஜித் - அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக திரிஷா - கயல் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ஆரவ், கணேஷ் சரவணன், ரவி ராகவேந்திரா, ஜீவா ரவி, ரம்யா சுப்ரமணியன், உள்ளிட்டா மிகப்பெரிய நட்சத்திரபட்டாலமே இணைந்து நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை சுமார் 300 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

66
shalaini ajith

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தின் திரைப்படம் ரிலீஸ் ஆவதால், ஒட்டுமொத்த ரசிகர்களுமே இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்... காலை முதலே ரசிகர்கள் திரையரங்கில் பட்டாசு வெடித்து கட்அவுட் வைத்து இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் தற்போது அஜித், கார் ரேஸ் பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தை ரசிகர்களுடன் கண்டு அவரின் மனைவி ஷாலினி சத்யம் திரையரங்கிற்கு வந்து, முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஜித்துக்கு காத்திருந்த அதிர்ச்சி; இன்டெர்வல் ட்விஸ்ட் வெறித்தனம்! லீக்கான தகவல்!

click me!

Recommended Stories