இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்... படக்குழுவினருடன் சண்டை போட்டதால் பரபரப்பு

Published : Mar 12, 2023, 07:45 AM IST

இந்தியன் 2 படக்குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தளத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

PREV
14
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்... படக்குழுவினருடன் சண்டை போட்டதால் பரபரப்பு

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருடன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

24

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களிடம் பிரத்யேக பயிற்சி பெற்று நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டை பொதுமக்கள் முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... காற்றே வராத குகைக்குள் தினமும் 14 மணி நேரம்... ரிஸ்க் எடுத்து நடித்த ஜித்தன் ரமேஷ்..!

34

இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வரும் பகுதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு நன்கொடை கேட்டு அப்பகுதி கிராம மக்கள் வந்துள்ளனர். அப்போது படக்குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டச்சுக்கோட்டை நுழைவு வாயிலை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

44

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், கிராம மக்களிடமும், படக்குழுவினருடம் பேசி சமாதானப்படுத்தி இருதரப்பினரை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இந்தியன் 2 படத்தை வருகிற தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 'வணங்கான்' பட கெட்டப்பில் மிரட்டும் அருண்விஜய்..! சூர்யாவையே மிஞ்சிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!

Read more Photos on
click me!

Recommended Stories