தளபதி விஜய் நடித்த 'குருவி' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். இவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, பட தயாரிப்பில் மட்டுமின்றி நடிகராகவும் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க துவங்கினார்.
சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்பதை தாண்டி, தன்னுடைய தாத்தா மற்றும் அப்பா பாணியில் அரசியலில் திடீரென குதித்தார் உதயநிதி. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி வாகை சூடியதை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
'வணங்கான்' பட கெட்டப்பில் மிரட்டும் அருண்விஜய்..! சூர்யாவையே மிஞ்சிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதால், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக அதிரடியாக கூறினார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'மாமன்னன்' திரைப்படம் தான், தன்னுடையை கடைசி திரைப்படம் என கூறிய இவர், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகினார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி, தன்னுடைய மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவருடைய பர்சனல். எனக்கும், என்னுடைய மனைவிக்கும், மகனுக்குமான விஷயம்... இது எனவே இதைப்பற்றி வெளியே சொல்ல விரும்பவில்லை. இது அவருடைய பர்சனல், இதற்குள் நானே ஒரு லிமிட்டை தாண்டி தலையிட முடியாது என்று முதல்முறையாக மகனின் சர்ச்சை குறித்து பதிலடி கொடுத்துள்ளார். இவரில் இந்த பளார் பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.