எப்போதுமே வித்யாசத்தை புகுத்தி ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் திரைப்படம் இயக்கி வருபவர் இயக்குனர் பாலா. இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக நடிகர் விக்ரமின் மகன் துருவை வைத்து இயக்கிய, 'வர்மா' திரைப்படம், எதிர்பார்த்தது போல் வரவில்லை என்கிற காரணத்தால், படக்குழுவினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில்... பின்னர் ott தளத்தில் வெளியாகி,மோசமான விமர்சனங்களை சந்தித்தது.