'விக்ரம்' படத்தை உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி வெறித்தனமான ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய்யுடன் 'லியோ' படத்திற்காக கை கோர்த்துள்ளார். விஜய், கேங் ஸ்டாராக நடிக்கும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.