Vikranth Shares New Info About Thalapathy Vijay Son Jayson Sanjay: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றி அவருடைய சித்தப்பாவும், நடிகருமான விக்ராந்த் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
தமிழி சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, பின்னர் 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் மூலம் கதாநாயகனாக மாறியவர் தான் விஜய். ஆரம்ப காலத்தில் விஜய் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி நடிகராக மாறினார். இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல, தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தையும் அடைந்துள்ளார்.
26
ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள்:
இவர், தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடிக்க ரூ.275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், ப்ரீ பிஸினஸும் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இது தளபதி விஜயின் கடைசி திரைப்படம் என்பதால், இந்த படத்தை பார்க்க உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
36
தளபதியின் தம்பி விக்ராந்த்:
தளபதி விஜய்யை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் தான், அவரின் சித்தி மகனான விக்ராந்த். இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்பதால், தற்போது வரை சினிமாவில் தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடி வரும் பிரபலமாகவே உள்ளார்.
46
ஜேசன் சஞ்சய் பற்றி கூறிய விக்ராந்த்:
இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றி கூறியுள்ளார். பொதுவாக முன்னணி நடிகர்களின் வாரிசுகளை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த பலர் ஆர்வம் காட்டுவது உண்டு. அந்த வகையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போதே இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டினார்களாம்.
56
உறுதியாக இருந்த ஜேசன்:
விஜய் தன்னுடைய மகனின் விருப்பமே தன்னுடைய விருப்பம் என்பதில் உறுதியாக இருந்ததால், எந்த ஒரு கட்டத்திலும் மகனை நாடி என கட்டாயப்படுத்தவில்லை. அதே நேரம் ஜேசன் சஞ்சய்க்கு சிறு வயதில் இருந்தே, தன்னுடைய தந்தை போல் ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகமாக விருப்பம் இல்லை என்றும், ஒரு இயக்குனராக அறிமுகமாவதையே அவர் விரும்பினார். அதே போல் தன்னுடைய சொந்த முயற்சியால் மட்டுமே வளர வேண்டும் என நினைக்கிறார். எப்போதுமே தன்னுடைய தந்தையின் பெயரை அவர் பயன்படுத்தியது இல்லை. இவரின் இந்த எண்ணமே அவரை பல மடங்கு உயர்ந்தும் என தெரிவித்துள்ளார்.
66
ஜேசன் இயக்கியுள்ள சிக்மா:
ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாகி உள்ள 'சிக்மா ' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். சமீப காலமாக இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக சிலர் மாறி வரும் நிலையில், அப்பா இடத்தை நிரப்பும் விதமாக தளபதி மகனும், ஹீரோவாக மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.