cobra movie Update : ரிலீசுக்கு ரெடியாகும் விக்ரமின் ‘கோப்ரா’.... சுடச்சுட வருகிறது ஹாட் அப்டேட்

First Published | Apr 16, 2022, 2:17 PM IST

cobra movie Update : நீண்ட நாட்களாக கோப்ரா படத்தின் அப்டேட் வெளியாகாமல் இருந்ததால், இப்படம் என்ன ஆனது என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக கேள்வி எழுப்பி வந்தனர். 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு, துப்பாக்கி போன்ற படங்களில் பணியாற்றிய அஜய் ஞானமுத்து, கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் கூட்டணி அமைத்த அஜய் ஞானமுத்து, அவரை வைத்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இது விறுவிறுப்பான திரில்லர் படமாக உருவாகி இருந்தது.


இவ்வாறு அடுத்தடுத்து 2 ஹிட் படங்களை கொடுத்த அஜ்ய் ஞானமுத்து அடுத்ததாக விக்ரமுடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு கோப்ரா என பெயரிட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் வெளியாகாமல் இருந்ததால், இப்படம் என்ன ஆனது என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அநேகமாக இது அப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டாகத் தான் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... samantha : டூ பீஸில் தாறுமாறு போஸ்... கவர்ச்சியில் உச்சம் தொட்ட சமந்தா - கதிகலங்க வைக்கும் ஹாட் கிளிக்ஸ்...!

Latest Videos

click me!