பட்டையை கிளப்பும் விக்ரம்..கமலின் முந்தைய படங்களின் வசூல் எவ்வளவு தெரியுமா?

First Published Jun 4, 2022, 1:46 PM IST

நேற்று வெளியாகி உலகம் முழுவதும்  விக்ரம் மாஸ் காட்டி வரும் வேளையில் கமலின் முந்தைய பட வசூல் குறித்த செய்தி தாறுமாறாக வைரலாகி வருகிறது.

vikram movie

விக்ரம் முதல் நாள் கலெக்சன் :

உலகம் முழுவதும் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் மாஸ் காட்டி வரும் விக்ரம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. வார இறுதி என்பதால் மூன்றே நாட்களில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'விக்ரம்' தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 திரைகளிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400 திரைகளிலும் வெளியிடப்பட்டது, மேலும் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது.

vishwaroopam 2

விஸ்வரூபம் 2 கலெக்சன் :

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'விஸ்வரூபம்' படத்தின் தொடர்ச்சி 5 ஆண்டுகள் கழித்து வெளியான படம்  விஸ்வரூபம் 2.  2018 இல் வெளியான இந்த படம் தமிழ்-இந்தி என இருமொழிகளில் வெளியானது கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. படம் வெளியாகும் மதம் சார்ந்த எதிர்ப்புகளை சந்தித்தார் கமல்.

thoongavanam

தூங்காவனம் பாக்ஸ் ஆபிஸ் :

2011 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு திரைப்படமான 'நூட் பிளான்ச்' படத்தின் ரீமேக் தான்  'தூங்காவனம். இப்படம் 'சீகட்டி ராஜ்யம்' என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடப்பட்டது. ஒரு இரவில் நடப்பதுதான் படத்தின் கதை, கமல்ஹாசன் போலீஸாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 2015 தீபாவளிக்கு வெளியிடப்பட்டது. மேலும் இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படம் வெளியான சமயத்தில் தமிழகத்தில் அதிக மழை மற்றும் சென்னை வெள்ளம் போன்றவை பாக்ஸ் ஆபிஸை பாதித்தது, இந்த படம்  ரூ 50 கோடிக்கு மேல் வசூலித்தது.

papanasam

பாபநாசம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் :

இந்த படமும் ரீமேக் தான். மலையாளத்தில் அமோக வரவேற்பை பெற்ற மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படத்தை தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்ய கமல் விரும்பினார். இப்படத்திற்காக அசல் இயக்குனர் ஜீத்து ஜோசப்பையும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கமல்ஹாசனின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக மாறியது. இந்த ரீமேக் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சூப்பர்ஹிட் படமானது.

Uttama Villain

உத்தம வில்லன் கலெக்சன் :

கமல்ஹாசன் எழுதி, ரமேஷ் அரவிந்த் இயக்கிய 'உத்தம வில்லன்' படத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஊர்வசி, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை ஒரு சினிமா நட்சத்திரத்தின் வாழ்க்கையைப் பற்றியது. நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட இந்த படம்   100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தும் பாக்ஸ் ஆபிஸில் படம் தோல்வியடைந்தது.

vishwaroopam

விஸ்வரூபம் பாக்ஸ் ஆபிஸ் :

2013-ல் கமல்ஹாசன் இயக்கி நடித்த  ‘விஸ்வரூபம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. ராஜ்கமல் இன்டர்நெஷனல் மூலம் கமல் தயாரித்த இந்த படத்தை  ஒரே நேரத்தில் தியேட்டர்களிலும், டிஜிட்டலிலும் வெளியிட  திட்டமிட்டதால் படம் சர்ச்சையில் சிக்கியது. தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட இது  பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து.  ரூ.100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம்  அதன் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு வசூலித்ததாக கூறப்படுகிறது.

click me!