மீண்டும் விஜய்யுடன் இணையும் சமந்தா..கன்பார்ம் செய்த லோகேஷ் கனகராஜ்!

Kanmani P   | Asianet News
Published : Jun 04, 2022, 12:49 PM IST

நேற்று வெளியாகி மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.. இந்த படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

PREV
15
மீண்டும் விஜய்யுடன் இணையும் சமந்தா..கன்பார்ம் செய்த லோகேஷ் கனகராஜ்!
vikram movie

நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மாஸ் வெற்றியை பெற்று வரும் கமலஹாசனின் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாஸில், சூர்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே வந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை அடுத்து இவரின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

25
rajini, lokesh kanagaraj

கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை ரசிகர்களுக்கு தந்த லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கியுள்ள விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்து இயக்க உள்ள சூப்பர்ஸ்டாரின் படம் குறித்து அப்டேட் வெளியாகிவிட்டது. இதுகுறித்து சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசி இருந்த லோகேஷ் கனகராஜின் புகைப்படம் வெளியாகி வைரலாகின.

35
MASTER

இந்நிலையில் மாஸ்டர் என்னும் ஹிட் கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி விட்டது. தற்போது விஜய் 66 வது படத்தில் பிசியாக உள்ளார். வம்சி இயக்கம் இந்த படத்தில் ரஷ்மிகா நாயகியாக நடித்து வருகிறார். இதையடுத்து  லோகேஷ் இயக்கத்தில் விஜய் 67 உருவாகவுள்ளதாக தெரிகிறது.

45
vijay 67

இப்படத்தின் புதிய அப்டேட்டாக நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக ‘ தெறி ’, ‘ மெர்சல் ’, ‘கத்தி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் கதாநாயகிகள் பெரிதாக பேசப்படவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது. எனவே இந்த படத்தில் கதாநாயகிக்கு நல்ல ரோல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

55
vijay 67

முந்தைய விஜயின் வெற்றி படங்களில் ஜோடியாக நடித்த சமந்தாவிடம் விஜய் 67  கதாநாயகியாக நடிக்க  தயாரிப்பாளர்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது. அவர் கடைசியாக 'காத்துவாகுல ரெண்டு காதல்' படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். 

Read more Photos on
click me!

Recommended Stories