Nayanthara Marriage : காசுக்கு ஆசைப்பட்டு திருமணத்தில் திடீர் மாற்றம் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் தகவல்

Published : Jun 04, 2022, 12:23 PM IST

Nayanthara Marriage : விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியின் மேலும் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
14
Nayanthara Marriage : காசுக்கு ஆசைப்பட்டு திருமணத்தில் திடீர் மாற்றம் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் தகவல்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தின் போது மலர்ந்த இவர்களது காதல் இன்றளவும் நீடித்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அந்த குட் நியூஸ் வந்தாச்சு.

24

வருகிற ஜூன் 9-ந் தேதி நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமண சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் கலந்துகொள்ள குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.

34

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. திருமணத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தான் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

44

இந்நிலையில், அவர்களது திருமணம் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியின் மேலும் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நயன் - விக்கி திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பெருந்தொகைக்கு வாங்கி உள்ளதால், அவர்கள் இந்த திருமண நிகழ்வை கலர்புல்லாக காட்ட திட்டமிட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தான் நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Vijay TV Ramar : என்னது... விஜய் டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா...! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

Read more Photos on
click me!

Recommended Stories