ஆங்கிலத்திலும் உருவாகும் விக்ரம்..வேற லெவலில் டைலாக் பேசியுள்ள உலக நாயகன்!

Kanmani P   | Asianet News
Published : Jun 22, 2022, 08:27 PM IST

கன்னடம் தவிர்த்து மற்ற மொழிகளில் விக்ரம் ஓடிடி ப்ரோமோ உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
ஆங்கிலத்திலும்  உருவாகும் விக்ரம்..வேற லெவலில் டைலாக் பேசியுள்ள உலக நாயகன்!
vikram

விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் கமல்ஹாசன் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்படம் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்துள்ளது, தற்போது அதன் டிஜிட்டல் பிரீமியர் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் தற்போது ரூ.400 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய ஹை-ஆக்‌ஷன் என்டர்டெய்னர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஜூன் 3, 2022 அன்று வெளியிடப்பட்டது.

24
vikram movie

OTTயில் விக்ரமைப் பார்க்கக் காத்திருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் டிஜிட்டல் முறையில் ஜூலை 8ஆம் தேதி திரையிடப்படுகிறது என முன்பு கூறப்பட்டது. இது Disney+Hotstar இல் ஸ்ட்ரீம் செய்யப்படும். முன்னதாக, ஹாசனின் 232வது படம் மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு வெளியிடப்பட்டது. 

34
Vikram

இந்நிலையில் இதற்கான ப்ரோமோ பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் சார்பாக எடுக்கப்படும் இந்த விளம்பரத்தில் விக்ரம் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் படத்தில் இல்லாத சீன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு கன்னடம் தவிர்து..தமிழ், ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட மொழிகளோடு இங்கிலீஸிலும் எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் கமலின் மாஸ் டைலாக்கை பார்க்க  ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

44
vikram movie

இப்படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்  மற்றும் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் திரைப்பட நிறுவனமான ராஜ் கமல் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் மற்றொரு தமிழ் சூப்பர்ஸ்டாரான சூர்யாவும் முக்கிய வேடத்தில் வந்தார். நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், காயத்ரி ஷங்கர், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, ஷிவானி நாராயணன், அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories