“அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தீய சக்திகள்” அதிரடி காட்டும் இயக்குநர் பேரரசு!

First Published Jun 22, 2022, 7:57 PM IST

பொது சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என பேரரசு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

agnipath scheme

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அக்னிபாத் திட்டத்தை இந்த வார தொடக்கத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நேரடியாக கல்வி நிறுவனங்களில் இருந்து அல்லது ஆட்சேர்ப்பு பேரணிகள் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் ஒப்பந்தத்தின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் 6 மாத கடுமையான பயிற்சி முறை மற்றும் 3.5 ஆண்டுகள் சுறுசுறுப்பான சேவைக்கு உட்படுத்தப்படுவார்கள். நான்கு ஆண்டுகள் ஆயுதப் படையில் இருந்த பிறகு, 25 சதவீதம் அதிக உந்துதல் மற்றும் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே 15 ஆண்டுகளுக்குப் படையில் தங்கியிருக்க வாய்ப்பளிக்கப்படும். இந்த வீரர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

Agnipath scheme

மீதமுள்ளவர்களுக்கு ரூ.11-13 லட்சம் தொகையுடன் பணி ஓய்வு வழங்கப்படும். புதிய முறையின் மூலம் சுமார் 40,000 வீரர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கு கல்விக் கடன் வழங்கவும் அரசு உதவும். மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான பல மாநிலங்களும் இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளன. பணியமர்த்தப்படுபவர்களுக்கு முன்பு போல் எந்த ஓய்வூதியமும் கிடைக்காது என்பதுதான் பாதகமாக இருக்கும். 

Agnipath scheme

இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் நான்கு ஆண்டு மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியுடன் போராட்டம் வெடித்து. குறிப்பாக குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகக் காணப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் பலவும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. நம்ம ஊர்  அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே அளவு ஆதரவு தெரிவிப்பவர்களும் உண்டு. அந்த வரிசையில் இயக்குனர் பேரரசும் சேர்ந்துள்ளார். அவ்வப்போது போது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் இயக்குனர் தற்போது “அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தீய சக்திகள்” என கடுமையாக சாடியுள்ளார்.

perarasu

ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு, அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவானது, இந்த திட்டம் மூலம் தேசத் துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டனர். மேலும் இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். இப்படி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள், பொது சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என பேரரசு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

click me!