
ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி, தற்போது ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி. கர்நாடக மாநிலம், மங்களூரை சேர்ந்த இவர் தன்னுடைய இளம் வயதிலிருந்து மாடலிங் மற்றும் ஃபேஷனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
2012 ஆம் ஆண்டு ஸ்ரீநிதி ஷெட்டி, 'கிளீன் அண்டு கிளியர்' ஸ்பான்சர் செய்த பிரெஷ் ஃபேஸ் போட்டியில் பங்கேற்று, டாப் போட்டியாளர்களின் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் 2015ல், மணப்புரம் மிஸ் சவுத் இந்தியாவில் பங்கேற்று மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் பட்டங்களை வென்றார். பின்னர் மணப்புரம் குயின் ஆஃப் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஸ்ரீநிதி ஷெட்டி அதில் முதல் ரன்னரப்பாக முடிசூடினார்.
இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு, மிஸ் திவா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானார். மிஸ் சுப்ரனேஷன் இந்தியா 2016 பட்டத்தை வென்று ஒட்டு மொத்த இந்தியாவையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இது தவிர தற்போது வரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற பல நாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் இந்தியாவை பிரதிநித்துவம் படுத்தும் விதத்தில், போட்டியாளராக பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றார்.
உண்மையை உடைத்த மயில் வாகனம்; கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
இந்த நிலையில் தான் இவரை நடிக்க வைக்கவும் பலர் முயன்று வந்தனர். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு கன்னட திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கே ஜி எஃப் சப்பட்டர் 1 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரூ.80 கோடி செலவில் எடுக்கப்பட்டு, ரூ. 250 கோடி வசூல் சாதனை செய்தது. தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து உருவான கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்திலும், ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்தார். முதல் முதல் பாகத்தில் நடிக்கும் போது ஒரு கோடி மட்டுமே சம்பளம் வாங்கிய ஸ்ரீநிதி, இரண்டாவது பாகத்தில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை ஐந்து மடக்காக உயர்த்தி, ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
அந்த பழக்கத்தை விட்ட பின்பு தான் தெளிவு வந்துச்சு; சிவகார்த்திகேயன் பகிர்ந்த சீக்ரெட்!
மேலும் இந்த திரைப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.1300 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு பின்னர், தமிழிலும் கால் பதித்த ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் விக்ரபுக்கு ஜோடியாக 2022 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
இந்த 'கோப்ரா' படம் ரூ.65 கோடி முதல் ரூ.70 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீநிதியின் கைவசம் தெலுங்கில் உருவாகும் தெலுசு காடா, HIT: The Third Case மற்றும் கனடாவில் கிச்சா 47 போன்ற திரைப்படங்கள் உள்ளன . இதுவரை இவர் நடிப்பில் மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி இருந்தாலும், மொத்தமாக அந்த படங்கள் ரூ.1600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ் ராஜ் பற்றி சரியாக கணித்த சோபன் பாபு; அப்படியே நடந்த ஆச்சர்யம்!