சியான் விக்ரம் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கோப்ரா படத்தை டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய இரு வேறு ஜானர் படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இறக்கி உள்ளார்.
முன்னதாக இவர் இயக்கத்தில் வெளியான இருப்பிடங்களும் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததால் கோப்ரா படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதிலும் இந்த படத்தில் நாயகன் சியான் என்பதும் மற்றும் ஒரு சிறப்பாக இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் படப்பிடிப்பிலிருந்து சமீபத்தில் தான் திரைக்கு வந்தது.
நடிகர் விக்ரம் சுமார் ஏழு வேடங்களில் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட விக்ரம் கோப்ரா பட ப்ரமோஷன்காக தானே நேரடியாக இறங்கியிருந்தார். இதற்காக உள்நாட்டு பயணத்தை நடிகர் விக்ரம் மற்றும் நாயகி ஸ்ரீநிதி செட்டி ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.
தமிழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விக்ரமை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆனந்த கூத்தாடி வந்தனர்.
விக்ரமின் நடிப்பு பலத்த பாராட்டுகளை பெற்ற போதிலும் படத்தில் தேவையான சுவாரஸ்யம் இல்லை என்கின்ற மோசமான விமர்சனங்களும் வந்துள்ளன. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் வெளியான முதல் நாளிலேயே டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
56
cobra
சுமார் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு 3 மணி நேரம் 3 நிமிடம் 3 செகண்ட் என இந்த படத்தின் ரன்னிங் டைமூம் முன்பே வெளியாகியிருந்தது. தற்போது படம் மிக நீளம் என்கிற விமர்சனம் எழுந்தது.
66
cobra
மிக நீளமாக இருப்பதால் படத்தில் சுவாரஸ்யம் குறைவதாகவும் ஒரு பேச்சு உண்டு. இதனால் படத்தின் நீளத்தை குறைக்க பட குழு முடிவு எடுத்துள்ளதாம். அதன்படி இந்த படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் அகற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.