நட்சத்திர பட்டாளத்துடன் விக்ரம் ஆடியோ & ட்ரைலர் லாஞ்ச்..யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா?

Published : May 14, 2022, 07:33 PM ISTUpdated : May 14, 2022, 07:35 PM IST

கமல்ஹாசனின் ' விக்ரம் ' ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரமாண்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக நடைபெறவுள்ளது.

PREV
16
நட்சத்திர பட்டாளத்துடன் விக்ரம் ஆடியோ & ட்ரைலர் லாஞ்ச்..யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா?
vikram movie

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் அனிருத் இசையில் உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். 

26
vikram movie

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

36
vikram movie

வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ள இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது. அந்த வகையில் விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் லஞ்ச்  நாளை சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

46
rajini - kamal

விக்ரம் பட விழாவிற்கு வருவாரா ரஜினி ?

தனது நண்பரான ரஜினிக்கு ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் கமல். ஆனால் சமீப காலமாக ரஜினி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை நிறுத்திக்கொண்டுள்ளார். மேலும் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தவிர்த்திருந்தார் ரஜினி. ஆகையால் கமல் கொண்டாட்டத்தில் ரஜினி கலந்து கொள்ள 50 சதவீதமே வாய்புள்ளதாம். ஆனாலும் கமல் நெருங்கிய நண்பர் என்பதால் ஒரு வேளை ரஜினி வருகை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

56
Kamal Vijay

விஜய் 66 -ல் பிஸியாக இருக்கும் விஜய் : 

அதேபோல விஜயுடன் நல்ல பிணைப்பில் இருக்கும் கமல் இவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 66 வது படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் வருவாரா என்பதும் குழப்பம் தான்.

66
kamal vikram - suriya

சூர்யா விஜயம் :

கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த ட்ரைலர் லாஞ்சுக்காக ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 'விக்ரம்' படத்தில் ஒரு கேமியோவில் சூர்யா தோன்றியுள்ளதாக கூறப்படுவதால் இவர் கட்டாயம் வருவார் என தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories