படப்பிடிப்பிலிருந்து ஒதுங்கிய சியான் விக்ரம்...இது தான் காரணமா?

First Published May 14, 2022, 6:51 PM IST

சமீபகாலமாக விக்ரம் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவதை புறக்கணிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

mahaan

சியானின் மகான் :

சியான் விக்ரம் கடைசியாக 'மகான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த அதிரடி படமான இதில் துருவ விக்ரம் வில்லன் ரோலில் நடித்திருந்தார். OTT தளத்தில் நேரடியாக வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது.

cobra

கோப்ராவாக மாறிய விக்ரம் :

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது இயக்கியுள்ள படம் கோப்ரா. இதில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப்  நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.  தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது.

Ponniyin Selvan

ஆதித்ய கரிகாலன் விக்ரம் :

கோப்ராவை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வனில் இணைந்துள்ளார் விக்ரம். இயக்குனரின் கனவான இந்த படம் பிரமாண்டமாக நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வருகிறது. இதில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்துள்ளார்.

dhruva natchathiram

விக்ரமின் துருவ நட்சத்திரம் : 

கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கிய துருவ நட்சத்திரம் படத்திலும் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் , அதேசமயம் ஜோமோன் டி.ஜான் , சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன், மனோஜ் பரமஹம்சா மற்றும் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை.

vikram 61

பா.ரஞ்சித்துடன்  சியான் 61 :

சியான் விக்ரம் துருவ நட்சத்திரத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை.

actor vikram

படப்பிடிப்பை புறக்கணிக்கும் விக்ரம் :

சியான் விக்ரம் துருவ நட்சத்திரம், சியான் 61 என இரு படங்களின் படப்பிடிப்பை பெண்டிங் வைத்துள்ள விக்ரம் இதுவரை எந்த தகவலும் சொல்லாமல் உள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளாராம். அதோடு இவர்களுடன் மகான் இயக்குனர்  கார்த்திக் சுப்பராஜூம் குடும்பத்துடன் சுற்றுலாவை கொண்டாடி வருவதாக தகவல் சொல்கிறது.

actor vikram

விரைவில் இந்தியா திரும்பும் விக்ரம் (vikram ) :

நடிகர் விக்ரம் ஒரு மாதம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில வாரங்கள் ஆனதால் இன்னும் ஓரிரு வாரங்களில் விக்ரம் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. அதோடு 61வது படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

click me!