தெருத்தெருவாக அலைந்து நடிகை விஜி சந்திரசேகர் மகள் செய்யும் சேவை..! குவியும் பாராட்டுக்கள்..!

பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகளும் நடிகையுமான லவ்லின், கொரோனா ஊரடங்கினாள் சாப்பாடு இல்லாமல் வாழும் தெருவோர நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இது குறித்த சில புகைப்படங்கள் இதோ..

தன் பேருக்கு ஏற்ற போல் அழகாக மட்டும் இல்லை அன்பாகவும் இருக்கும் விஜியின் மகள் லவ்லின்
இந்த கொரோனா தொற்றின் காரணக்காக தெருக்களில் வசிக்கும் பல நாய்கள், சாப்பிடுவதற்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது. அவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் இந்த பணியை செய்து வருகிறார் விஜியின் மகள்.

லவ்லின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஹவுஸ் ஓனர் திரைப்படம், பெரிதாக வெற்றி பெறாததால் இதுவரை பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படாத நடிகையாக இருக்கும் லவ்லின் தன்னுடைய உயர்ந்த சேவை மூலம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே... மாஸ்க் அணிந்தபடி வெளியே வந்து இவர் செய்யும் பணிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் தங்களால் முடிந்த வரை, கண்ணில் படம் நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள் இந்த யங் டீம்.
லவ்லின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் வண்ணம், அவர்களுடைய நண்பர்களும் தினமும் உதவி செய்து வருகிறார்கள்.
தெரு நாய்களும் தங்களுக்கு தினமும் உணவளிக்கும் இவர்களுடன் அன்பாக பழகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும்.

Latest Videos

click me!