“நன்றி... வணக்கம் என்றால் இதுதான் அர்த்தம்”... முதல்வர் இல்லத்தில் விஜய் சேதுபதி கொடுத்த பளீச் பதில்...!

First Published Oct 19, 2020, 7:06 PM IST

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனி 800 படம் குறித்து பேச எதுவும் இல்லை. அந்த படத்திலிருந்து விலகிவிட்டேன் என பதிலளித்தார். 
 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் கடந்த 13ம் தேதி அதிகாலை 1 மணியளவில் காலமானார். இதையடுத்து தாயார் மறைவுக்கு பிறகு சென்னை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து சந்தித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
undefined
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.
undefined
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
undefined
முதல்வரின் தாயார் இறப்பிற்கு ஆறுதல் கூறிய அவர், அவருடைய அம்மாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.​
undefined
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதியிடம் நீங்கள் நடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த முத்தையா முரளிதரன் அறிக்கைக்கு நன்றி என பதிவிட்டுள்ளீர்களே அதற்கு என்ன அர்த்தம்? என கேள்வி எழுப்பப்பட்டது.
undefined
அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நன்றி.. வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். 800 படத்திலிருந்து நடிப்பதை கைவிட்டு விட்டேன். அந்த படம் பற்றி பேச எதுவும் இல்லை, அது முடிந்து போன விஷயம் என்று அர்த்தம் என பதிலளித்துள்ளார்.
undefined
click me!