புதிய அப்டேட்டாக தெலுங்கில் விஜய் 66 ' வரசுடு ' என்றும் , தமிழில் 'வாரிசு' என்றும், என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22, 2022 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.