யோகி பாபுவின் “மெடிக்கல் மிராக்கல்”.. பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!

Kanmani P   | Asianet News
Published : Jun 16, 2022, 02:08 PM IST

ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும்  “மெடிக்கல் மிராக்கல்” படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

PREV
13
யோகி பாபுவின் “மெடிக்கல் மிராக்கல்”.. பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!
Yogi Babu Medical Miracle Shooting started with Pooja

தனது தோற்றத்தாலும் எகத்தால பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் யோகி பாபு. வில்லன்னா கூட பரவாயில்லை என்னும் டைலாக்குடன் திரையுலகிற்குள் வந்த யோகி பாபு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நாயகர்களும் ஒருவராகி விட்டார். குழந்தைகள் ரசிக்கும் ஹீரோக்களில் முன்னிலையில் இருக்கும் இவர்   "ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, உடன் அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு,  ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே.

23
Yogi Babu Medical Miracle Shooting started with Pooja

இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத்,  KPY வினோத்,  KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

33
Yogi Babu Medical Miracle Shooting started with Pooja

இசை - சித்தார்த் விபின், ஒளிப்பதிவு - S.மணிகண்ட ராஜா, எடிட்டிங் - தமிழ்குமரன், கலை இயக்கம் - ராஜா A, பாடல்கள் - ரோகேஷ், நிர்வாக தயாரிப்பு - கார்த்திக் V, தயாரிப்பு மேற்பார்வை - கே.ஆர்.பாலமுருகன், மக்கள் தொடர்பு - சதீஷ்குமார் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.  முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள “மெடிக்கல் மிராக்கல்”  படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories