Vijayakanth
மதுரை மண்ணில் பிறந்த கருப்பு மாணிக்கம் தான் ரசிகர்களால் கேப்டன் என கொண்டாடப்படும் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய இளம் வயதில் இருந்தே, சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட விஜயகாந்த் எப்படியும் நடிகராக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால் இவருடைய தந்தை ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்ததால், அதை கண்ணும் கருத்துமாக விஜயகாந்த் பார்த்துக் கொண்டாலே போதும் என எண்ணினார். காரணம் தன்னுடைய மகன் மீது அவருக்கு இருந்த அக்கறை தான்.
ஒரு வயதிலேயே விஜயகாந்த் தன்னுடைய தாயை இழந்த நிலையில், முழுக்க முழுக்க அப்பாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்ததால் அப்பாவின் சம்மதம் இல்லாமல், அனுமதி எதையும் செய்ய துணிவில்லாத விஜயகாந்த் பகல் முழுவதும் ரைஸ்மிலில் வேலை செய்தாலும், இரவில் சில புகைப்படங்கள் எடுத்து அதன் மூலம் பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.
Vijayakanth Get cinema Chance
அந்த வகையில் இவர் எத்தனையோ போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்து பார்த்தும் திருப்த்தி ஏற்படவில்லை. இவருக்கு ராசியாக அமைந்தது, மதுரையில் உள்ள ராசி ஸ்டுடியோவில் எடுத்த போட்டோஸ் தான். விஜயகாந்த் நடிகராக மாறிய பின்னர், ராசி ஸ்டுடியோவும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அந்த ராசி ஸ்டூடியோவின் ஓனரே தெரிவித்திருந்தார்.
விஜயகாந்தின் முயற்சியை பார்த்து தந்தை மனம் இறங்கி அனுமதி கொடுத்த நிலையில், ஒரு வழியாக சென்னைக்கு வந்து வாய்ப்பு தேட துவங்கினார் விஜயகாந்த். சில நிராகரிப்புகளை சந்தித்தாலும், 1979-ல் 'இனிக்கும் இளமை' என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை எம் ஏ காஜா இயக்கி இருந்தார். சுதாகர் மற்றும் ராதிகா ஹீரோ - ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அகல் விளக்கு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கேம் சேஞ்சர் விஜய் நடிக்க வேண்டிய படமா? ஷங்கர் போட்ட கண்டிஷனால் தலைதெறிக்க ஓடிய தளபதி!
Actor Vijayakanth Movies
இவருடைய நடிப்பு முதல் இரண்டு படங்களிலேயே, நன்கு கவனிக்கப்பட்ட நிலையில் 1980களில் நீரோட்டம், சாமந்திப்பூ, தூரத்து இடி முழக்கம், போன்ற படங்களில் நடித்தார். 1981-ல் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் தான் விஜயகாந்துக்கு திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்த தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த சிவப்பு மல்லி, நெஞ்சில் துணிவிருந்தால், ஜாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், போன்ற படங்கள் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் விஜயகாந்துக்கு தனி அஸ்தஸ்த்தை பெற்று தந்தது.
Nadigar Sanga Thalaivar
குறிப்பாக 1984-ல் சுமார் மொத்தம் 18 படங்களில் ஹீரோவாக நடித்து மிரட்டினார். இதே ஆண்டில் வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம் விஜயகாந்தை உச்ச நடிகராக மாற்றியது. கமல் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அலைக்கு நடுவே விஜயகாந்த் தனித்து தெரிய துவங்கினார். 1990-களில் கமல் - ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய விஜயகாந்த், MGR பாணியில் மக்களுக்காக போராடும் கதைக்களம் கொண்ட படங்களில் அதிகம் நடித்தார். இதுவே விஜயகாந்த் அரசியலில் இறங்கு எழுச்சியை பெற காரணமாக அமைத்தது.
நடிப்பை தாண்டி, நடிகர் சங்க தலைவராகவும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்த விஜயகாந்த்... கடனில் மூழ்கிய நடிகர் சங்கத்தை கலை நிகழ்ச்சிகள் நடத்தி மீட்டார். மேலும் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், எங்கள் அண்ணா, சுதேசி, அரசாங்கம், விருதகிரி, சகாப்தம், என சில படங்களை தயாரித்துள்ளார். ஈவரின் நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தின் இமாலய வெற்றி தான் ரசிகர்கள் இவரை கேப்டன் என அழைக்க வழிவகுத்தது.
குஷ்பூ மட்டும் என் லைஃப்ல வரலேனா; அந்த நடிகையை லவ் பண்ணிருப்பேன் - சுந்தர் சி ஓபன் டாக்
Captain Vijayakanth Death
அரசியலிலும் களமிறங்கி வெற்றிகரமான அரசியல் தலைவராக தனி முத்திரை பதித்த விஜயகாந்த், தேமுதிக என்கிற கட்சியை துவங்கி அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்த விஜயகாந்த் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். தமிழகத்தில் முன்னணி கட்சி தலைவராகவும் முதலமைச்சராகவும் மாற தகுதி இருந்தும், ஆளுமை இருந்தோம் இவரின் உடல்நிலை காரணமாக பல வருடங்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் இவருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு சளி மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றாலும், விஜயகாந்த் செய்த பல நல்ல விஷயங்களை தற்போது அவரின் குடும்பத்தினர் ஏற்று செய்து வருகின்றனர். மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான், தேமுதிக கட்சியின் தலைவராக உள்ளார்.
Vijayakanth First Death Anniversary
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள், சமீபத்தில் அனுசரிக்கப்பட்ட நிலையில்... இதில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு விஜயகாந்தின் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு விசேஷங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரனுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகள் கீர்த்தனா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது வரை திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. மேலும் விஜய பிரபாகரனும் தொடர்ந்து தன்னுடைய தந்தையை தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் அடிக்கடி விஜயகாந்துக்கு உடல்நிலை மோசமாகி வந்ததால், திருமண தேதியை அவருடைய குடும்பத்தினர் தள்ளி வைத்ததாக கூறப்பட்டது. விஜயகாந்த் இறந்த ஒரு வருடத்திற்கு பின்னரே, விஜயகாந்த் மகன் பிரபாகரனின் திருமணம் நடைபெறும் என சில தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் முடிந்து விட்டதால் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அடடே இவரா? எதிர்நீச்சல் 2 சீரியலில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லன்
Vijayakanth son Wedding and House Warming
அதே போல் விஜயகாந்த் சுமார் 20 சதுர அடியில், போரூர் காட்டுப்பாக்கம் பகுதியில் பிரம்மாண்டமாக கட்டியுள்ள கனவு இல்லத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த வீட்டின் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், விஜயகாந்த் மரணத்திற்கு பின்னர் சில மாதங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த வீட்டில் பணிகள் அனைத்து முடிவடைந்து கிரகப்பிரவேசத்திற்கு தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் அடுத்தடுத்து மறைந்த தேமுதிக தலைவர், விஜயகாந்தின் வீட்டில் விசேஷங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.