விஜயகாந்த் டூ கேப்டன் ....காவல்துறைக்கு புகழ் சேர்த்த விஜயகாந்த்.. போலீஸ் வேடத்தில் கலக்கிய மக்கள் நாயகன்

First Published Aug 25, 2022, 4:03 PM IST

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகனாக இருந்தவர் விஜயகாந்த்.  70 களில் துவங்கி 80, 90கள் வரைக்கும் இவர் ராஜ்யம் தான். திரையில் காவல்துறை அதிகாரி என்றாலே அது விஜயகாந்த் தான். அந்த அளவிற்கு ஆணித்தனமாக ரசிகர்கள் மனதில் பதிந்து போனது கேப்டனின் போலீஸ் அவதாரம். விஜயகாந்தின் காவல்துறை கதாபாத்திரம் மூலம் ஹிட் அடுத்த சில படங்களை தற்போது பார்க்கலாம்.

sethupathi ips

 சேதுபதி ஐபிஎஸ் :

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை ஈர்த்த படம் தான்  சேதுபதி ஐபிஎஸ் . இதற்கும் இளையராஜா இசை தான். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட குழந்தைகளை போலீஸ் அதிகாரி எப்படி மீட்கிறார் என்பதே இந்த படத்தின் கதையாகும். இதில் டூப் இல்லாமல் இவர் செய்த ஸ்டண்ட் தற்போது வைரலாகி வருகிறது.

maanagara kaaval

 மாநகர காவல் :

தியாகராஜன் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக சுமா  நடித்திருப்பார். நம்பியார், லட்சுமி, நாசர், ஆனந்த்ராஜ், செந்தில் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 150 நாட்கள் தாண்டி தியேட்டர்களில் ஓடிய மாநகர காவல்படம் தெலுங்கில் சிட்டி போலீஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...என்னை பார்த்தவுடன்.. விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கார்த்தி

captain prabhakaran

 கேப்டன் பிரபாகரன் :

ஆர் கே செல்வமணி இயக்கத்தில் அதே ஆண்டு வெளிவந்த மற்றும் ஒரு படம்  கேப்டன் பிரபாகரன் . இந்த படத்தில் சரத்குமார், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைப்பில் வெளியான எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை மையமாகக் கொண்டு இது எடுக்கப்பட்டு இருந்தது. இது விஜயகாந்தின் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் மிரட்டி இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களின் வெகுவான பாராட்டுகளை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...இன்றைய இளம் நடிகர்கள் செய்ய யோசிக்கும் ரிஸ்குகளை அசால்ட்டாக எடுத்த விஜயகாந்த்..

chatriyan

சத்ரியன் :

மணிரத்தினத்தின் உதவியாளராக இருந்து இயக்குனரான சுபாஷ் 1990 ஆம் ஆண்டு இயக்கி இந்த படத்தில் விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி, திலகன் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைப்பில் உருவான இந்த படம் 150 நாட்களை தாண்டி திரையரங்குகளில் ஜொலித்தது. பன்னீர்செல்வம் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தார் விஜயகாந்த். இந்த படத்தில் தான் பன்னீர்செல்வமாக திரும்ப வரணும் என்ற வசனம் இடம் பெற்று இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு..என்னது ஜெயம் ரவி படம் மாதிரி இருக்கா? விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட விமர்சனம் இதோ !

honest raj

ஆனஸ்ட் ராஜ் :

கேசவ் என்பவரின் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக கௌதமி நடத்திருப்பார். இதற்கும் இளையராஜா இசையமைப்பு தான். தேவன், மனோரமா, செந்தில், விஜயகுமார், நிழல்கள் ரவி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் வந்திருந்தனர். விஜயகாந்த் நடிப்பில் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்ததில் இதுவும் ஒரு படமாகும். தெலுங்கில் இது போலீஸ் கமண்ட் என ரீமேக் செய்யப்பட்டது.

pulan visaranai

புலன் விசாரணை : 

செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த புலன் விசாரணை இந்த படத்தில் விஜயகாந்த், ரூபிணி, நம்பியார்,  ஆனந்த்ராஜ், சரத்குமார் உள்ளிட்டோ நடித்திருந்தனர். இந்த படமும் 150 நாட்களை தாண்டி வெற்றி பெற்றது. தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் இது ரீமேக் ஆனது.

click me!