தமிழில் நடிகர் விமலுக்கு ஜோடியாக 'களவாணி', படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், 'கலகலப்பு', 'மெரினா', 'மூடர்கூடம்', 'மத யானைக்கூட்டம்' என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், இவரால் தமிழில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.