'கேப்டன் என்னைப் பார்த்தவுடன் கையைப் பற்றிக் கொண்டார். எளிதில் அடையாளம் கண்டது மகிழ்ச்சியாக உள்ளது என விஜயகாந்தை நேரில் சந்தித்த பிறகு கார்த்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் தனது எழுபதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை ஒட்டி பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதோடு கட்சி தலைமையகத்தில் தனது தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார் விஜயகாந்த். சமீப காலமாக உடல்நிலை குன்றிய நிலையில் இருக்கும் கேப்டனை காண காத்திருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இன்று அவரது தரிசனம் மிகுந்த அசுவாசத்தை கொடுத்துள்ளது.
24
இந்நிலைகள் நடிகர் கார்த்தி விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம், 'கேப்டன் என்னைப் பார்த்தவுடன் கையைப் பற்றிக் கொண்டார். எளிதில் அடையாளம் கண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் சங்கம் அவருக்கு கடமைப்பட்டுள்ளது. அந்த ஆசையில் அவரை சந்திக்க வந்தேன் என கூறியுள்ளார்.
தற்போது கார்த்திக் பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விருமன் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. முத்தையா இயக்கத்தில் வெளியாகி உள்ள இதில் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், கருணாஸ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், மகனுக்கும் தந்தைக்கும் இடையேயான பந்தத்தை மையமாக கொண்டு உருவாகிய இந்த படம் ரசிகர்களின் நேர்மையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. மணிரத்னத்தின் கனவு படமான இதில் கார்த்தி வந்திய தேவனாக நடித்துள்ளார். முன்னதாக இவர் குறித்தான பொன்னியின் நதி பாடல் வெளியாகி வைரலானது. இந்த படம் வருகிற செப்டம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.