
தமிழ் திரையுலக பிரபலங்களாலும், ரசிகர்களாலும், கேப்டன் என அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இந்த பெயருக்கு ஏற்ற போல், ஆளுமை மிக்க மனிதராகவும் இருந்தவர். நடிப்பை தவிர்த்து வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி என தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். அதேபோல் மிகவும் மனிதாபிமானமிக்க மனிதராகவும் பார்க்கப்படுகிறார். தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவி செய்துள்ள விஜயகாந்த், ஏராளமான ஏழைகளின் பசியாற்றிய புண்ணியவானாக உள்ளார்.
அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில், சமபந்தி விருந்து என்கிற முறையை அறிமுகம் செய்தவரும் இவரே. தினமும் தான் சாப்பிடும் உணவைப் போல் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என நினைத்து அனைவருக்கும் கறிசோறு போட்டார். இதன் காரணமாகவே மற்ற படப்பிடிப்புகளுக்கு செல்லாமல், விஜயகாந்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்ற பலர் ஆசை படுவார்கள்.
இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நடிச்சிருக்கவே மாட்டேன்! கீர்த்தி சுரேஷ் வேதனை!
இவருடைய உயர்ந்த எண்ணங்களினாலும், செயலாலும் தான் இன்று பல ரசிகர்களால் ஒரு கடவுள் போன்றே பார்க்கப்படுகிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெற்றது. அங்கு விஜயகாந்துக்கு நினைவிடம் நிறுவி ஒரு கோவில் போல, ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
ஏராளமான ரசிகர்கள் தினமும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று வணங்கி விட்டு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு நாளும், மதியம் ஒருவேளை மட்டும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் டி சிவா பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
வரப்போகுது நல்ல செய்தி; அடுத்தடுத்து விஜயகாந்த் குடும்பத்தில் நடைபெற உள்ள 2 விசேஷங்கள்!
இந்த பேட்டியில், நட்சத்திர கலைவிழா நடைபெறும் போது விஜயகாந்த் ஒரு அசம்பாவிதத்தில் இருந்து நடிகை மீனாவை காப்பாற்றிய தகவலை கூறியுள்ளார். நட்சத்திர கலைவிழாவை விஜயகாந்த் தனி ஆளாக நின்று அனைத்து வேலைகளையும் செய்து முடித்தாராம். அப்போது மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும்போது, அவர்கள் தங்கி இருந்த ஓட்டல் முன்பு பிரபலங்களை பார்ப்பதற்காக சுமார், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி விட்டார்களாம். சரியான போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார், ஆகியோர் நடிகைகளின் லக்கேஜ்களை பேருந்தில் ஏற்றுக் கொண்டிருந்தார்களாம். ஹெல்மெட் போட்டு கொண்டு அங்கு வந்த நபர் ஒருவர் நடிகை மீனா அருகே வந்து நின்று, அவரிடம் மிகவும் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். அந்த விஷயத்தை விஜயகாந்த் கவனித்துவிட்ட நிலையில், வேகமாக அந்த நபர் பக்கத்தில் வந்த விஜயகாந்த் ஹெல்மெட்டை அப்படியே தூக்கி விட்டு, மண்டையில் ஓங்கி ஒரு அடி அடிக்க... அந்த நபருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டி உள்ளது. பின்னர் அங்கு தள்ளு முள்ளில் ஈடுபட்ட பலர் பயந்து பின்வாங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகைகளும் பத்திரமாக பேருந்தில் அழைத்து செல்ல பட்டார்களாம்.
விஷாலின் விடாமுயற்சியால் 12 வருட காத்திருப்புக்கு பின் ரிலீசாகும் மத கஜ ராஜா!