Theatre Release Movies
தமிழ் சினிமாவுக்கு 2024-ம் ஆண்டு ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. முதல் ஆறு மாதங்கள் வெற்றிக்காக ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு, அடுத்த ஆறு மாதங்கள் ஓரளவு ஆறுதல் அளித்தன. இருப்பினும் கடந்த வருடத்தில் மட்டும் கோலிவுட் 1000 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு அதகளமாக ஆரம்பமாகி உள்ள நிலையில், ஒரு புறம் பொங்கல் ரேஸில் போட்டி அதிகமாகி வர, மறுபுறம் ஜனவரி முதல் வாரத்திலேயே சைலண்டாக அரை டஜன் படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
Marco
மார்கோ
மலையாளத்தில் உன்னி முகுந்தன் மற்றும் நிவின் பாலி நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் மார்கோ. இப்படம் ஜனவரி 3ந் தேதி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது. மலையாளத்தை போல் தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஹனீப் அடேனி இயக்கி உள்ளார்.
Small Budget Movies
சிறு பட்ஜெட் படங்கள்
சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய பயாஸ்கோப் திரைப்படம், நட்டி நட்ராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்த சீசா திரைப்படம், ரச்சிதா மகாலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள எக்ஸ்ட்ரீம் திரைப்படம், மணிமூர்த்தி இயக்கியுள்ள லாரா, அப்புக்குட்டி நடித்த கலன் ஆகிய சிறு பட்ஜெட் தமிழ் படங்களும் ஜனவரி 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
OTT Release Movies
ஓடிடி ரிலீஸ் படங்கள்
தமிழ் பேண்டஸி திரைப்படமான ஆரகன் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 3ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதுதவிர தெலுங்கு லவ் ரெட்டி திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் மலையாளத்தில் ஐ ஆம் காதலன் திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகிறது. இந்தியில் குன்ஹா என்கிற வெப்தொடரின் 2வது சீசன் ஹாட்ஸ்டார் ஓடிடி தளாத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் விஜய் நடிக்க வேண்டிய படமா? ஷங்கர் போட்ட கண்டிஷனால் தலைதெறிக்க ஓடிய தளபதி!