Jai Bhim Movie, Suriya, Rao Ramesh
Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie : முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவரது நடிப்பில் வந்த சிங்கம் 2 படம் தான் கடைசியாக அவர் கொடுத்த ஹிட் படம். அதன் பிறகு கடந்த 11 ஆண்டுகளாக ஒரு ஹிட் படம் கூட சூர்யா கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த கங்குவா படம் கூட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மோசமான வரவேற்பை எதிர்கொண்டது.
Jai bhim, Rao Ramesh Tamil Dubbing
ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா ரூ. 110 கோடி கூட வசூல் எட்டவில்லை. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ.106 கோடி வரையில் தான் வசூல் குவித்தது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக ரூ.2000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று பேசிய சூர்யா படம் வெளியான பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்திலும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் நடித்து வருகிறார்.
Jai Bhim Movie, Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie
இந்த நிலையில் தான் சூர்யாவுடன் இணைந்து ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகர் ரமேஷ் ராவ் அந்தப் படம் குறித்தும், சூர்யா குறித்தும் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜெய் பீம் படத்தில் நான் தான் என்னுடைய போஷனுக்கு டப்பிங் பேசியிருந்தேன். எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும். ஆதலால், நான் தான் டப்பிங் பேசியிருந்தேன். நான் டப்பிங் பேசியதைப் பார்த்து வியந்த சூர்யா என்னுடைய கேரவனுக்கு வந்து கோல்டு காயின் பரிசாக கொடுத்தார். தமிழுக்கு நீங்கள் கொடுத்த மரியாதைக்காக நான் கொடுக்கும் பரிசு. இந்த கதாபாத்திரம் உங்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.
Suriya, Rao Ramesh, Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie
இந்த ரோல் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது. சூர்யா கோல்ட் காயின் கொடுக்கும் போது செட்டிலிருந்த எல்லோருமே எனக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்தார்கள். இதை சொல்வதற்கு என்ன காரணம் என்றால் சூர்யா தமிழ் மொழி மீது அந்தளவிற்கு பற்றும், மரியாதை வைத்திருக்கிறார். அவர் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருமே தமிழ் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்திய இந்த படத்தை இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
court ordered fir against suriya for jai bhim
கடந்த 1993 ஆம் ஆண்டு இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜா கண்ணு மற்றும் செங்கேனி தம்பதியினர் தங்களது உறவினர்களுடன் இணைந்து வயல்களில் நாசம் செய்யும் எலிகள் மற்றும் பாம்புகளை பிடித்து காட்டுப்பகுதிகளுக்கு விடும்ப் பணியை செய்து வந்தனர். அப்போது ஒரு பணக்காரர் வீட்டில் பாம்பு பிடிக்க ராஜா கண்ணு நகையை திருடியதாக கூறி அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கிறார்.
அவர் மட்டுமின்றி அவரது உறவினர்களையும் போலீசார் கைது செய்கின்றனர். அங்கு ராஜா கண்ணு போலீஸ் காவலில் கொல்லப்படுகிறார். இதையடுத்து அவரது உடலை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று போட்டு அவர் தப்பித்து சென்று விட்டதாகவும் அவர் சாலை விபத்தில் உயிரிழ்ந்திருக்கலாம் என்று வழக்கை திசை திருப்புகின்றனர்.
Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie
இருளர் பழங்குடியின மக்களுக்கு கல்வி கற்று தரும் மித்ரா மூலமாக சூர்யாவின் அறிமுகம் கிடைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜாகண்ணுவை தேடும் வேலை நடக்கிறது. கடைசியில் அவர் உயிரிழந்தது தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தோட கதை. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கும். இந்தப் படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.