பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஜெஃப்ரி, அன்ஷிதா மற்றும் தர்ஷிகா உடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பாடகர் உள்ளே அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இதற்கு முந்தைய சீசனில் சுயாதீன இசைக் கலைஞர்களான அசல் கோளாரு, நிக்சன் ஆகியோர் போட்டியாளராக கலந்துகொண்டனர். அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8-வது சீசனில் கானா பாடகரான ஜெஃப்ரி போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸுக்கு முன்பு வரை இவர் பெரியளவில் பேமஸ் ஆகவில்லை. ஆனால் பிக் பாஸில் எண்ட்ரி கொடுத்த முதல் வாரத்திலேயே அனைவரது பேவரைட் போட்டியாளராக மாறினார் ஜெஃப்ரி.
24
Jeffry Anshida Outing
முதல் சில வாரங்கள் தனித்து விளையாடி வந்த ஜெஃப்ரி, ஒரு கட்டத்தில் ஜாக்குலின், செளந்தர்யா, ரயான் ஆகியோர் அடங்கிய கோவா கேங்கில் ஒரு அங்கமாக சேர்ந்தார். அந்த கேங்கில் சேர்ந்த பின்னர் ஜெஃப்ரியின் ஆட்டம் மந்தம் ஆனது. இதை ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியே வெளிப்படையாக கூறியதை அடுத்து கோவா கேங்கில் இருந்து வெளியேறிய ஜெஃப்ரி, அன்ஷிதா மற்றும் பவித்ரா உடன் நெருங்கி பழகி வந்தார்.
ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாக இருந்ததால் அவரை சில வாரங்கள் யாருமே நாமினேட் செய்யவில்லை. அதுமட்டுமின்றி நாமினேஷன் ஃப்ரீ பாஸையும் அவருக்கு அனுதாபத்தில் வழங்கப்பட்டது. இதை கவனித்த விஜய் சேதுபதி, ஜெஃப்ரியிடம் அறிவுரை கூறினார். சில சமயங்களில் அரசியல் நம்மளை சுத்தியும் நடக்கும், நம்மள வச்சும் நடக்கும் உஷாரா இருக்கனும் என எச்சரித்தார். அதற்கு அடுத்த வாரமே நாமினேஷன் சிக்கிய ஜெஃப்ரி எலிமினேட் ஆனார்.
44
Jeffry New Year Celebration
ஜெஃப்ரியோடு சேர்த்து அன்ஷிதாவும் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை வெளியேறியதும் ஜெஃப்ரி ஜாலியாக தன்னுடைய பிக் பாஸ் நண்பர்களோடு அவுட்டிங் சென்று மகிழ்ந்துள்ளார். குறிப்பாக விஷாலின் காதலிகளான தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெஃப்ரி.
இதுதவிர சத்யாவும் ஜெஃப்ரியின் நெருங்கிய நண்பர் என்பதால், அவர் ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு பார்ட்டியில் ஜெஃப்ரியும் கலந்துகொண்டார். குறிப்பாக நீச்சல் குளத்தில் ஜெஃப்ரி உடன் சேர்ந்து சத்யா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா ஆகியோர் உற்சாகமாக குளியல் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.