இளையதளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து 66 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலிருந்து படப்பிடிப்பு காட்சிகள் வெளியானதை தொடர்ந்து விஜயின் பிறந்த நாள் அன்று வாரிசு என பெயரிடப்பட்டுள்ள விஜயின் 66 வது பட லுக்ஸ் ரிலிஸ் செய்யப்பட்டது. இந்த போஸ்டர்கள் வைரலாகி வருகினற்ன.
குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாகும் இந்த படம் முழுக்க செண்டிமெண்ட் நிறைந்திருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார். இதில் விஜய் இளமை தோற்றத்தில் நடிக்கிறார். இவருடன் ரஷ்மிக்கா மந்தனா, சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்தை தில் ராஜு என்பவர் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் விஜயின் மச்சினிச்சி குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் பார்க்க லண்டனில் இருந்து வந்த ரசிகை தான் சங்கீதா. இவர்களின் இரண்டாம் சந்திப்பிலேயே திருமணம் குறித்து முடிவானது. பெற்றோர்கள் நடத்தி வைத்த இவர்களது திருமணத்திற்கு திரைபிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு லண்டனில் இருந்து இந்தியா வந்த சங்கீதாவின் சகோதரி விஜய் நடித்து வந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. சங்கீதா போன்ற முக சாயலை உடைய அவரது தங்கை தனது தந்தையின் தொழில்களை கவனித்தபடி லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.