விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே டாப் ரேட்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. காதல், கல்யாணம், அண்ணன் - தம்பி பாசம் என விதவிதமாக சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சீரியல் “காற்றின் மொழி”.இதில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் உடன் பிரியங்கா என்பவர் வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
‘காற்றின் மொழி’ தொடரில் ரோஸி என்ற கேரக்டரில் நடிப்பவர்தான் வைஷ்ணவி ராஜசேகர்.
நடிகை வைஷ்ணவி ராஜசேகருக்கும் அவரது காதலர் சாய் விக்னேஷ்வருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை வைஷ்ணவி ராஜசேகர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் பல திரைப்பிரபலங்களுக்கும் எளிமையாக திருமணம் நடந்தது போலவே இவர்களுக்கும் சத்தமில்லாமல் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.